எம்ஜிஆரை அவமானப்படுத்தும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.. திடீரென அதிமுக டோனில் மாறி.. மோடி அட்டாக்
திருப்பூர்: திருப்பூரில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை புகழ்ந்து பேசியது கவனம் பெற்றது.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவினர் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பேசினார். எம்ஜிஆர் பற்றி பிரதமர் மோடி பேசியதாவது:
நண்பர்களே இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்து பார்க்கிறேன். இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த கண்டிக்கு சென்றேன். அங்குள்ள மக்களிடம் பேசினேன். இன்று அவர் பணியாற்றிய மண்ணுக்கு வந்துள்ளேன். எம்ஜிஆர் தனது ஆட்சியில் தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதி கொடுத்தார். இதனால் பெண்கள், இளைஞர்கள் எம்ஜிஆரை மதித்து வந்தனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.
ஏழை மக்கள் அத்தனை பேரும் ஒப்பற்ற தலைவர் என எம்ஜிஆரை புகழ்ந்து வருகின்றனர். எம்ஜிஆர் குடும்ப அரசியல் என்ற அடிப்படையில் சாதிக்கவில்லை. திறமையின் காரணமாக அரசியலில் ஜொலித்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திமுக தமிழகத்தில் எம்ஜிஆரை அவமானப்படுத்தும் வகையில் கேவலமான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது'' என்றார்.
-
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications