திருப்பூர், கோவை மாவட்ட இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. கலெக்டர்கள் வெளியிட்ட அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் 4-வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் அரசால் நடத்தப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான திறமை உள்ளவர்களை அறிய, வேலை தேடுபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுகின்றன. அந்த முகாமில் பங்கேற்கும் பலருக்கும் வேலை கிடைத்து வருகிறது. இதில் படித்த பட்டதாரிகள், படிக்காதவர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற முடியும்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் 4-வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்பவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடுபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.inஎன்ற தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. வேலைதேடுபவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
இதேபோல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு, +2, ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க அனுமதி இலவசமாக வழங்கப்படும், பங்கேற்க வயது வரம்பு எதுவும் கிடையாது.
இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களிடம் உள்ள பணிக்காலியிடங்களுக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு - 0422-2642388 என்ற எண்ணில் அறியலாம்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications