ரிதன்யா தற்கொலை வழக்கு: ஜாமீன் வழங்கக்கூடாது என கோர்ட்டில் வாதம்.. சித்ராவை கைது செய்யவும் கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரை மற்றும் இவருடைய மனைவி ஜெயசுதாவின் மகள் ரிதன்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரை மற்றும் இவருடைய மனைவி ஜெயசுதாவின் மகள் ரிதன்யாவுக்கும் வுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமண நிச்சயதார்த்தின் போது தனது மகளுக்கு 300 பவுன் நகை, சொகுசு கார் வாங்கி தருவதாக அண்ணாதுரை கூறியுள்ளார். இதில் முதற்கட்டமாக திருமணத்தின் போது, 100 பவுன் நகையும், ரூ.62 லட்சத்தில் சொகுசு காரும் வாங்கி கொடுத்து உள்ளனர். பிறகு 200 பவுன் நகையை எப்போது கொடுப்பார்கள் என்று கவின்குமார் மனைவியிடம் கேட்டு அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. ரிதன்யாவின் மாமனார், மாமியாரும் சேர்ந்து தொல்லை செய்ததாக தெரிகிறது.
மனமுடைந்த ரிதன்யா கடந்த 28 ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு காரில் சென்று, செட்டிபுதூர் பகுதியில் விஷம் குடித்து, காருக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தன் சாவுக்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்று உருக்கமாக அனுப்பிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணமகன் வீட்டார் மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்துவதாக கூறி ரிதன்யா தனது அப்பாவுக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பின உள்ளார்.
போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரி ரிதன்யாவின் கணவரும், மாமனாரும் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ரிதன்யாவின் பெற்றோர் குடும்பத்தினர் தரப்பில் இந்த மனுவின் மீது இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவின் குமாருக்கும், ஈஸ்வர மூர்த்திக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
அப்போது ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, "தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை மாற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாற்றப்பட்ட எஃப்.ஐ.ஆரில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் செல்போனில் உள்ள வாக்குமூலம் குறித்து பதிவு செய்யப்படவில்லை. ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. ஆகவே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.
வழக்கு விசாரணையில் நிறைய தொய்வு உள்ளது. இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதால், விசாரணை தாமதமாக நடக்கிறது. போலீசார் விசாரணை சரியாக நடக்கவில்லை என புகார்தாரர் கருதுகிறார். 3வது குற்றவாளியான மாமியாரை காவலில் எடுத்து விசாரித்தால் முழு விவரம் தெரியவரும். மேலும் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று நீதிமனறத்தை நாட உள்ளனர்" என்று தெரிவித்தார். பதிவு செய்த கொண்ட நீதிபதி ஜாமீன் மது மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications