விபூதி இட்டு வந்த மாணவியை திட்டிய ஆசிரியை? மதமாற்ற முயற்சி என பெற்றோர் புகார்.. நடந்தது என்ன
திருப்பூர்: திருப்பூர் அரசுப் பள்ளியில் மதம் மாற்றும் செயல்களில் ஆசிரியை ஈடுபடுவதாக மாணவி ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவியை மதம் மாற்றும் செயல்களில் ஆசிரியை ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அந்த மாணவி பேசும் வீடியோவும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

திருப்பூர்
திருப்பூரில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி தான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்த மாணவி தினம்தோறும் பள்ளி செல்லும் போது, நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பள்ளியில் தமிழ் ஆசிரியை திலகவதி மாணவியைப் பார்த்து தினமும் நெற்றியில் பட்டை போட்டு வரத் தெரிகிறது ஒழுங்காகப் படிக்கத் தெரியாதா என்று திட்டியதாகக் கூறப்படுகிறது.

திட்டிய ஆசிரியை
மேலும், வகுப்பு தொடங்கும் முன் இரு கைகளையும் நெஞ்சில் இறுக்கி வைத்துக் குறிப்பிட்ட கடவுளைப் பிரார்த்தனை செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். மேலும், இஷ்ட தெய்வங்களைக் கூறும்படி ஆசிரியை கேட்ட போது, மாணவி சிவன் என்று குறிப்பிட்டதாகவும் அதை அந்த ஆசிரியை விமர்சிக்கும்படி பேசியதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

அச்சம்
இதுமட்டுமின்றி ஆங்கில ஆசிரியையும் தனது மகள் நெற்றியில் விபூதி இட்டுள்ளதைக் குறிப்பிட்டுத் திட்டியதாகவும் கையெழுத்து பயிற்சியில் முருகன், சிவன், விநாயகர், கிருஷ்ணர் என்று இந்து தெய்வங்கள் பெயரை எழுதக்கூடாது என்று கடுமையாக ஒருமையில் பேசியதாகவும் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மேலும், இதனால் தங்கள் மகள் பள்ளி செல்லவே அச்சப்படுவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

நடவடிக்கை தேவை
இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் பேஸ்புக் பக்கத்திலும் மாணவி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிலும் மாணவி இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மன உளைச்சலுக்கு ஆளான தனது மகள் பள்ளி செல்ல மறுப்பதோடு அச்சத்தில் உள்ளதாகவும் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தனது மகளுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய ஆதாரங்கள் கிடைத்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications