திமுகவிடம் காட்டிய உக்கிரம்.. தவெக அரசு மீது இல்லையே.. அண்ணாமலையின் விமர்சனத்தை கவனித்தீர்களா

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது என வி த லீட்ர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு தற்போது ஜிடிபி வளர்ச்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர்ந்துள்ளன. ஆனால் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன,

Annamalai

இதுபற்றி வி த லீட்ர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப்பதிவில் கூறுகையில், "கடந்த ஆறு மாதங்களாக, தமிழகத்தின் ஜிஎஸ்டி (GST) வருவாய் நிலை, மாநிலத்தின் பொருளாதார நிலை, தவெக அரசின் நிதி முன்னுரிமைகள், நிலையான வருவாயை உருவாக்குவதில் அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபர் மாதத்தில் ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதல். அதுவும் ஒற்றை இலக்க வளர்ச்சியாகவே உள்ளது.

பண்டிகைக் காலம், பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு என, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாகவே அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வசூலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாதது கவலையளிக்கிறது.

கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் ஜிஎஸ்டி வருவாயை ஒப்பிடும்போது, ஐஜிஎஸ்டி பகிர்வை இதற்கான காரணமாக முன்வைப்பது பொருத்தமானதல்ல. ஏனெனில், ஐஜிஎஸ்டி புதிதாகக் கொண்டுவரப்பட்டதல்ல. தமிழ்நாட்டிற்கு இணையான பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலுவான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. இந்த வேறுபாட்டைத் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத் துறைகளிலும் அரசின் மூலதனச் செலவினங்கள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு அரசுத் துறைகளில் மூலதனச் செலவினங்கள் மந்தமடைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது. அரசின் மூலதனச் செலவினங்கள் குறையும்போது, அதன் மூலம் வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள், தொழில் நடவடிக்கைகள், வணிகம் என, பல வகையான பொருளாதாரப் பங்களிப்பும் பாதிக்கப்படுகிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையே பலவீனப்படுத்தும்.

இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added - GVA) தமிழகத்தின் பங்களிப்பு வெறும் 10.26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும், இந்தியாவின் உற்பத்தித் துறை GVA-வில், தமிழகத்தின் பங்களிப்பு 10.3 சதவீதமாகத்தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பங்களிப்பு ஏறக்குறைய அதே நிலையில் நீடிப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு காலத்தில் தமிழகத்திற்குப் பின்னால் இருந்த மாநிலங்கள் இன்று வேகமாக முன்னேறி, வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து வருகின்றன.

தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு வெளியிடும் மாவட்ட அளவிலான பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் (Regional Imbalance Reports) மட்டுமே மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது என்பதை இதற்கு முன் நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். அந்த அறிக்கைகள் மாநிலத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவி மட்டுமே. வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கெனத் தனித்துவமான பொருளாதாரத் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், அரசின் நேரடி கண்காணிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதுதான் உண்மையான தீர்வாக அமையும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சமமாகப் பரவுவதற்கான திட்டமிடல் அவசியம்.

வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது." இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்நிலையில் வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்த காலத்தில், ஆளும் கட்சியாக இருந்த திமுகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தற்போதைய தவெக அரசை அண்ணாமலை அந்த அளவிற்கு விமர்சிப்பது. மிகவும் மென்மையாக அணுகுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+