ரத்த வாடை..குப்பை மேட்டில் கிடந்த சடலம்! 3வது கணவனாம்.. ராத்திரியில் டார்ச்சர்! விக்கித்த திருப்பூர்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூரில் குப்பைமேட்டில் இரும்பு கருவியால் தாக்கி கொலை செய்யப்பட்ட 32 வயது பெண் சடலத்தை மீட்டு அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை செய்து தலைமறைவான மூன்றாவது கணவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூரில் சாலை ஓரத்தில் இருந்த குப்பை மேட்டில் பெண் சடலம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பை மேட்டின் ஓரத்தில் தலையில் அடிபட்ட நிலையில் இருந்த பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், தெக்கலூர் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பாகுல் என்பவரின் மனைவி சுகன்யா (32) என்பது தெரியவந்தது. சுகன்யாவின் முதல் கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் பாகுல் என்பவரை மறுமணம் செய்துள்ளார்.

பெண் கொலை
நால்வரும் வசித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பாகுலை விட்டு பிரிந்து சென்றார். இரண்டாவது கணவரை பிரிந்து சென்ற சுகன்யா, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களாக அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணக்குமார் குடிபோதையில் பாகுலிடம் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

3வது கணவன்
அப்போ உனது மனைவி விஷம் குடித்து விட்டாள்.. உனது மனைவியை யாரோ கொன்று விட்டார்கள், அவளின் பிரேதம் தெக்கலூர் பக்கத்தில் ஒரு குப்பை மேட்டில் இருக்கிறது போய் எடுத்துக் கொள் என்று கூறியுள்ளான். இது குறித்து உடனடியாக பாகுல் அவிநாசி காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் ?
மேலும் தலைமறைவாக இருந்த மூன்றாவது கணவன் சரவணகுமாரை போலீசார் தேடி வந்த நிலையில் சரவணகுமாரை திண்டுக்கல்லில் வைத்து அவிநாசி போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து சரவணகுமாரிடம் விசாரித்த பொழுது சரவணகுமார் மது போதையில் அடிக்கடிதகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதும். ஒரு கட்டத்தில் சுகன்யா தான் மீண்டும் தனது இரண்டாவது கணவர் பாகுலிடம் செல்வதாக சுகன்யா கூறியுள்ளதும் தெரியவந்தது.

மதுபோதை
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சரவணகுமார், சுகன்யாவிடம் கருமத்தம்பட்டி வீட்டில் குடிபோதையில் சண்டையிட்டதால் வீட்டின் உரிமையாளர் அவர்களின் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். சரவணகுமார் மற்றும் சுகன்யா இருவரும் கருமத்தம்பட்டியில் இருந்து அவிநாசி வரும் வழியில் தெக்கலூர் அருகே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. சரவணகுமார் தான் கைப்பைக்குள் மறைத்து வைத்திருந்த புட்டர் ரிஞ்ச் இரும்பு கருவியால் சுகன்யா தலையில் தாக்கியுள்ளார்.

கைது
சம்பவ இடத்திலேயே சுகன்யா உயிரிழந்ததை அடுத்து, இத்தகவலை சுகன்யாவின் இரண்டாவது கணவன் பாகுலிடம் தொலைபேசியில் கூறிவிட்டு தனது சொந்த ஊரான திண்டுக்கல் சென்று தலைமறைவு ஆகியுள்ளார். இந்நிலையில் செல்போன் சிக்னல் மூலம் அவிநாசி போலீஸார் திண்டுக்கல்லுக்கு சென்று சரவணகுமாரை கைது செய்து அழைத்து வந்து மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி, பின்பு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications