திருப்பூரில் ஆபாச செயலால் அசிங்கப்பட்ட அரசியல்வாதி.. அவிநாசி பெண்ணை சீண்டி.. 52 வயசுல இது தேவையா?
திருப்பூர்: போக்சோ சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என ஒருமித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பரவலாக எழுந்தபடியே உள்ளது. மற்றொருபக்கம் போக்சோவில் கைதாகும் நபர்களுக்கும் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை விதித்தபடியே உள்ளது.. எனினும் சிறார், சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்தபடியே உள்ளது.. நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?
கடந்த 2023ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், பழங்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி.. 62 வயதாகும் ரத்தினசாமி, ரியல் எஸ்டேட் புரோக்கராக உள்ளார்..

அதே பகுதியில் சில வீடுகள் கட்டி வாடகைக்கும் விட்டிருக்கிறார்.. இதில் ஒரு வீட்டில் தொழிலாளி குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது.. கணவன் மனைவியுடன் 10 வயது மகளும் வசித்து வந்திருக்கிறார்கள்..
அப்போது ஹவுஸ் ஓனர் ரத்தினசாமி அந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.. இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் அழுதுகொண்டே சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவிநாசி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரத்தினசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் போக்சோ
இந்த வழக்கானது, திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில், நீதிபதி கோகிலா முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது... அப்போது அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமிலா பானு ஆஜரானார்.. வழக்கின் இறுதியில், ரத்தினசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்கு பிறகு ரத்தினசாமியை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
நேற்றைய தினம் போக்சோ வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்றது.. ஆனால் நேற்றைய தினம் மற்றொரு கொடுமையான சம்பவம் இதே திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்துள்ளது.
அவிநாசி அதிமுக பிரபலம்
அவிநாசியில் வசித்து வருகிறார், நடமாடும் தையல் தொழிலாளி ஒருவர்.. இவருக்கு 16 வயது மகள் மனநலம் குன்றிய நிலையில் உள்ளார்.
அந்த சிறுமியிடம் அவிநாசி நகராட்சி 12வது வார்டு அதிமுக கவுன்சிலரான சாந்தியின் கணவரும், அதிமுக 12வது வார்டு கிளைச் செயலாளருமான ராஜேந்திரன் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ராஜேந்திரனுக்கு 52 வயதாகிறது.. பைக்குகளை ரிப்பேர் செய்யும் ஒர்க்ஷாப் சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்..
மிரட்டப்பட்ட பெற்றோர்
16 வயது சிறுமியிடம் ராஜேந்திரன் அசிங்கமாக நடந்து கொண்டதையடுத்து, அச்சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவிநாசி மகளிர் போலீசில் புகார் தந்தார்கள்..
இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட அவிநாசி மகளிர் போலீசார், ஊத்துக்குளி பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து திருப்பூர் ஜெயிலில் அடைத்தனர்.
அதேபோல, புகாரளிக்கக் கூடாது என்று சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மூர்த்தி (52) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சங்கடத்தில் அதிமுக?
அவிநாசி பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவரும், அதிமுக கிளைச் செயலாளருமான ராஜேந்திரன் கைதாகி உள்ளது, திருப்பூர் அதிமுகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் நெருங்கும் சூழலில், இதுபோன்ற சலசலப்புகள் எழுந்துள்ளது அதிமுகவுக்கு சங்கடத்தை தந்துள்ளது.. எனவே சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் மீது விரைவில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.
-
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications