Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் நந்தினி பெயரில் கலப்பட நெய்.. அவிநாசி தோட்டத்தில் ரகசியம் அம்பலம்.. இதை நம்பவே முடியலயே

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகே கலப்பட நெய் தயாரித்து கர்நாடகத்துக்கு விநியோகித்து வந்த ஆலைக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதில் சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளரையும், மேலாளரையும் போலீஸார் வலை வீசி கொண்டிருக்கிறார்கள்.. இந்த விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே கைதான 4 பேரிடமும் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.

KMF எனப்படும் கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தென்னிந்தியாவிலேயே மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக நந்தினி இன்று மாறியிருக்கிறது..

பிரபலமான நந்தினி நெய் இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு 'நந்தினி' நெய்யில் கலப்படம் நடப்பதாக அதன் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நடைபெற்ற தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட கலப்பட நெய் தயாரிப்பு மையம் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுவது தெரிய வந்தது.

அதாவது பெங்களூருவை சேர்ந்த KMF வினியோகஸ்தரான மகேந்திரா என்பவர், சேவூர் வடுகபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆலங்கட்டிபாளையம் பகுதியில், கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ரகசியமாக ஆலையை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அவிநாசி - நந்தினி நெய்யில் கலப்படம்

KMF-ல் இருந்து வாங்கும் அசல் நெய்யுடன், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை எல்லாம் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, அசல் "நந்தினி" பாக்கெட்டுகளில் ஆரம்பத்தில் நிரப்பி வந்துள்ளனர்.

5 லிட்டர் பாக்கெட் நெய் உள்ளதென்றால், அதில் 1 லிட்டர் நெய் மட்டுமே ஒரிஜினல்.. மிச்சம் 4 லிட்டரும் கலப்படமாகும்..ஆனால், இது எதுவுமே வெளியே தெரியாமல், திருப்பூரில் தயாரித்த இந்த கலப்பட நெய் பெங்களூருவில் உள்ள கடைகளுக்கு வேன்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, 'நந்தினி' நெய் என்ற பெயரிலேயே அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர்..

கடந்த 2 வருடங்களாகவே இப்படியொரு மோசடி நடத்தப்பட்டு, பல கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ளதும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

திருப்பூரில் நந்தினி நெய்

இதையடுத்து, கலப்பட நெய் தயாரித்த வினியோகஸ்தர் மகேந்திரா, அவரது மகன் தீபக், திருப்பூரை சேர்ந்த விற்பனையாளர் முனிராஜ் மற்றும் வேன் டிரைவர் அபி அர்ஸ் ஆகிய 4 பேரையும் சேவூர் போலீசாரின் உதவியுடன், பெங்களூரு போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்..

அத்துடன் மகேந்திராவின் நெய் ஆலையில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களையும் பறிமுதல் செய்தனர்... ரூ.1..26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..

கலப்பட நெய்

மேலும், அவிநாசி துணை வட்டாட்சியர் கௌரி தலைமையிலான அதிகாரிகள் விரைந்து ஆலைக்கு சென்று சீல் வைத்தனர்... கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி திருப்பூரில் அடங்காத நிலையில், அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. கலப்பட நெய் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கர்நாடக போலீஸார் தமிழ்நாட்டு போலீஸுடன் இணைந்து பொள்ளாச்சி, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் விசாரணை நடத்தினார்கள்.

தோட்டத்தில் சிவக்குமார், நந்தினி

அப்போதுதான், அவிநாசி, நம்பியாம்பாளையம், ஆலங்காட்டுப்பாளையத்தில் ஒரு தோட்டத்து கிடங்கில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த கிடங்கில் சோதனை மேற்கொண்டபோது, அதில், சிவகுமார் என்பவர் அந்த கிடங்கை வாடகைக்கு எடுத்து அங்கு நந்தினி பெயரில் கலப்பட நெய் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கான ஸ்டிக்கர்கள் பொள்ளாச்சியில் அச்சிடப்பட்டு, பேக்கிங் செய்து விநியோகம் செய்ததும் அம்பலமாகி உள்ளது.. இப்போது அந்த கிடங்குக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது..

சிவகுமார் மற்றும் மேலாளர் ரம்யா ஆகியோர் கடந்த 2 வருடங்களாகவே அவிநாசியில் கிடங்கு அமைத்து கலப்பட நெய் தயாரித்து வந்தது உறுதியாகி உள்ளது. ஆனால், அவர்கள் 2 பேருமே தலைமறைவாக உள்ளதால் போலீசார் தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+