Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் ஆசை ஆசையாய்.. புத்தம் புதிய பைக் வாங்கிய நண்பனை.. விண்ணில் சந்திக்க சென்ற தோழன்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: உண்மையில் சில சம்பவங்கள் எந்த அளவிற்கு சந்தோஷத்தை தருகிறதோ, அதே விஷயம் நினைத்து கூட பார்க்கவே முடியாத வருத்தங்களையும் தந்துவிடும்.. சின்ன கவனக்குறைவு வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும்.. அதுவும் வாகனங்களை பொறுத்தவரை பலமுறை நடந்துள்ளது. திருப்பூரில் ஷோரூமில் இருந்து ஆசை ஆசையாய் புத்தம் புதிய இரு சக்கர வாகனத்தை வாங்கி வந்துள்ளார் தனியார் நிறுவன ஊழியர். அவருக்கு என்ன நடந்தது. அதனை பார்த்து நண்பர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவர் கூலித்தொழிலாளி ஆவார். அவருடைய மகன் வீரக்குமாருக்கு 18 வயது தான் ஆகிறது. இவர், ஐ.டி.ஐ. முடித்து விட்டு அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

Tiruppur New Bike row What Happened to the Employee A Friend s Reaction

இதனிடையே வீரக்குமாரின் சொந்த ஊரான மணக்கடவு கிராமத்தில் வசிப்பவர் கட்டிடத் தொழிலாளி தனசேகர் (18). இவரும், ஐ.டி.ஐ. முடித்துவிட்டு அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். வீரக்குமாரும், தனசேகரும் நண்பர்கள் ஆவார். இவர்கள் இருவருக்குமே 18 வயது நிறைவு பெற்ற உடனயே புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது.

அதன்படி ஐப்பசி மாத அமாவாசை நாளான கடந்த அக்டோபர் 21ம் தேதி (தீபாவளிக்கு மறுநாள்), புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வீரக்குமார் தனது நண்பர் தனசேகருடன் தாராபுரத்தில் உள்ள ஷோரூமுக்கு சென்றுள்ளார். ஷோரூமில் புதிய இருசக்கர வாகனத்தை அவர்கள் வாங்கினர். அதன்பிறகு அவர்கள் 2 பேரும் ஆனந்தமாய் புதிய இருசக்கர வாகனத்தில் மணக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

பைக்கை வாங்கிய வீரக்குமார் ஓட்டிச் சென்றார். பின்னால் தனசேகர் அமர்ந்து இருந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. தாராபுரம்-பழனி சாலையில் காட்டம்மன்கோவில் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அவர்கள் சென்ற சாலையில் விரிவாக்க பணி நடக்கிறது. இதனால் சாலையின் ஒருபுறம் வாகன போக்குவரத்தும், மறுபுறம் சாலை விரிவாக்க பணியும் நடந்து வருகிறது.

அப்போது எதிரே பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார், சட்டென இவர்களது மோட்டார் சைக்கிள் மீது, மோதுவது போல் வந்ததாக தெரிகிறது. இதனால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் 2 பேரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் வீரக்குமாருக்கு பலத்த காயமும், தனசேகருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வீரக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த தனசேகர், முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த நிலையில், புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அழைத்து சென்ற நண்பன், இறந்து விட்டானே என தனது உறவினர்களிடம் புலம்பியபடி இருந்துள்ளார். தனது நண்பரின் இழப்பை தாங்க முடியாததால், வீட்டில் யாரும் இல்லாத போது, தனசேகர் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவ்விரு சம்பவங்கள் குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+