திருப்பூரில் சினிமாவிற்கு அழைத்து செல்ல மறுத்த கணவன்.. புதுப்பெண் இருந்த கோலம்.. ஆடிப்போன உறவுகள்
திருப்பூர்: இதற்கு எல்லாமா வாழ்க்கையில் தவறான முடிவெடுப்பார்கள் என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு ஜென் z கிட்ஸ்கள் நடந்து கொள்கிறார்கள். 90ஸ் கிட்ஸ்களை விட, 2 கே கிட்சுகள் மற்றும் ஜென் z கிட்ஸ்கள் நடந்து கொள்ளும்விதம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சினிமா பார்க்க கணவர் அழைத்து செல்லாததால், புதுப்பெண் வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு செய்து தவறான முடிவெடுத்துள்ளார். சினிமா பார்ப்பதற்கு எல்லாம் இப்படி ஒரு முடிவா பல நெட்டிசன்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.
பல 2 கே கிட்ஸ் மற்றும் ஜென் z கிட்ஸ்கள் வாழ்க்கையில் அவமானங்களை, கஷ்டங்களை பார்க்காமல் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு சிறு பிரச்சனை என்றாலும், அதனை தாங்கி கொள்ளவோ அல்லது எதிர்கொள்ளவோ தயாராக இருப்பதுஇல்லை.. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்கு ஒரு சிறுபிரச்சனையும் வரக்கூடாது என்று பார்த்து பார்த்து வளர்க்கிறார்கள். அதுவே அவர்களுக்கு கடைசியில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆசிரியர் அறிவுரை கூறினால், சகமாணவன் பேசாமல் போனால், நண்பர்களுக்குள் சண்டை வந்தால், பாடத்தை படிக்க முடியாமல் போனால், சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் திட்டினால் ஏற்பது இல்லை.

திருமண உறவு
சிறு வயதில் இப்படி என்றால், திருமணம் ஆன பின்னர், கணவன் மனைவி உறவு, மாமனார் மாமியார் உறவு, தம்பதியாக எப்படி விட்டுக் கொடுத்து செல்வது, ஏமாற்றங்களை எப்படி எதிர்கொள்வது, பெரியவர்களிடம் எப்படி பேசவேண்டும். உறவினர்கள் முன்னிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எதுவுமே தெரியாமல் வளருகிறார்கள்.இறுதியில் அவர்கள் சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தவறை செய்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த 21 வயதாகும் ஜீவா என்பவர் சரக்கு ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி சவுமியா (23). இவர், காங்கயத்தில் உள்ள செருப்பு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சினிமாவிற்கு அழைத்து செல்ல மறுப்பு
புதுப்பெண்ணான சவுமியா, தனது கணவர் ஜீவாவிடம் சினிமா பார்க்க தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கடந்த ஒருவாரமாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர், வேலை காரணமாக மனைவியை சினிமா பார்க்க அழைத்து செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சவுமியா, தனது தாயிடம் செல்போனில் கூறி அழுதாராம். மேலும், விரக்தியில் இருந்தாராம். நேற்று காலை ஜீவா சரக்கு ஆட்டோவை எடுத்துக்கொண்டு வேலை விஷயமாக காங்கயம் சென்று விட்டார்.
சவுமியா எடுத்த முடிவு
சவுமியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர், திடீரென வீட்டின் விட்டத்தில் கயிற்றால் வாழ்க்கையை முடித்துக் கொண்டாராம். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த ஜீவா, மனைவி இருந்த நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சவுமியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பார்க்க கணவர் அழைத்து செல்லாததால், புதுப்பெண் எடுத்த முடிவு காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications