10 ஆண்டுகளுக்கு முன் தாய் இறப்பு.. கொரோனாவால் தந்தையையும் இழந்து தவிக்கும் இரு சிறுவர்கள்
திருப்பூர்: தாய் ஏற்கெனவே இறந்த நிலையில் கொரோனாவால் தந்தையும் உயிரிழந்ததை அடுத்து சிறுவர்கள் படிக்க முடியாமல் தவிக்கும் சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் கொண்டரசம்பாளையம் கே.கே. நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (45). கார் டிரைவரான இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், தரணீஷ் (13), ரித்விக் (10) என்ற இரு மகன்களும் உள்ளனர். ரித்விக் பிறந்தபோதே உடல்நலக் குறைவினால் கார்த்திகா இறந்துவிட்டார்.

இரு மகன்கள்
டிரைவர் வேலை பார்த்து தன் இரு மகன்களையும் பள்ளியில் செந்தில்குமார் படிக்க வைத்துள்ளார். கார்த்திகாவின் தாய் தேவி பேரன்கள் இருவரையும் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தாக்குதலுக்குள்ளான செந்தில்குமார் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கேள்விக்குறி
இதன் காரணமாக ஒன்பதாவது படிக்கும் தாரணீஷ், ஐந்தாவது படிக்கும் ரித்விக் ஆகிய இருவரின் படிப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. வயதான பாட்டி தேவியால் எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் பேரன்களையும் பராமரித்து படிக்க வைக்க இயலாத சூழ்நிலையில் உள்ளதாக கூறினார்.

தந்தை பலி
கொரோனாவால் தந்தை பலியானதற்கு நிவாரண தொகை மத்திய ,மாநில அரசுகள் வழங்குவதால் அந்த நிவாரணத் தொகையை இம் மாணவர்களுக்கும் கிடைக்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் இவ்விரு மாணவர்களின் கோரிக்கையை பரிசீலித்து நிவாரணத் தொகையும் கல்வியைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

பெற்றோர்
அரசு சார்பில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ஒரு தொகையும் கொரோனாவால் தாய், தந்தையர் இருவரில் ஒருவரை இழந்தவருக்கு ஒரு தொகையும் வைப்புத் தொகை செலுத்தப்படும் என அறிவித்துள்ளது. அந்த வகையில் மகப்பேறின் போது தாய் இறந்துவிட்டார், கொரோனாவால் தந்தையை இழந்த இரு குழந்தைகளுக்கும் அரசு உதவிட வேண்டும்.
இந்த சிறுவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
7904104383
9443547877
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications