மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே.. எப்போதும் இன்ஸ்டா ரீல் தானா? கோபமான கணவன்! சித்ராவுக்கு என்ன ஆச்சு?
திருப்பூர் : திருப்பூர் அருகே எப்போதும் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வந்ததை கைவிட வேண்டுமென்ற கணவனின் பேச்சை கேட்காத இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நவீன யுகத்தில் செல்போனுக்கு அடிமையாகி கிடக்கும் இளம் பெண்கள் மாணவர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது. அற்ப லைக்குகளுக்காகவும் கமெண்டுகளுக்காகவும் வாழ்க்கையை தொலைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் பேர் வழிகளின் வலையில் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்கள் ஒரு பக்கம், இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி மீள முடியாமல் தவிக்கும் குடும்பப் பெண்கள் ஒரு பக்கம் என சிக்கல் நீடித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதை நிறுத்தாததால் இளம் பெண் தனது கணவனாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்த அமிர்தலிங்கமும் அவரது மனைவி சித்ரா அந்தப் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். குடும்ப வறுமை காரணமாக இருவருமே வேலைக்குச் சென்ற நிலையில் அவர்களது இரண்டு மகள்களும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்திருக்கின்றனர்.

மனைவி மாயம்
முதலில் குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வந்த சித்ரா அதன் பிறகு செல்போனில் டிக் டாக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அது தடை செய்யப்பட்ட பிறகு ஷேர் சாட் இன்ஸ்டாகிராம் ரீல் ஆகியவற்றில் வீடியோ பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வேலைக்கு கூட செல்லாமல் எப்போதும் வீடியோ போட்டு வந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சில நபர்களுடன் திடீரென மாயமாகி இருக்கிறார்.

சினிமா வாய்ப்பு
இது குறித்து விசாரித்த போது சென்னையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக அந்த நபர்களுடன் சென்றது தெரியவந்ததும் இதற்கு அமிர்தலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை மீறி சென்னைக்கு சென்று சில மாதங்கள் இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என சித்ரா மீண்டும் திருப்பூர் வந்திருக்கிறார். அப்போது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை செல்வதாக சித்ரா கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

கடும் கோபம்
இதனால் சித்ரா கோபித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். தொடர்ந்து அவரது உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி நிலையில் சித்ராவை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் சித்ராவின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அருகில் வசிப்போர் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கழுத்தில் காயங்களுடன் சித்ரா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மனைவி கொலை
இதை அடுத்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக அமிர்தலிங்கத்தை பிடித்து விசாரித்த போது இன்ஸ்டாகிராம் வீடியோ போடுவதை நிறுத்தாததால் மனைவியை கொலை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!











Click it and Unblock the Notifications