'இவ்வளவு கூட்டம் ஏறினா வண்டி ஓட்ட முடியாது'.அரசு பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி இறங்கி சென்ற டிரைவர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நகரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவில் பேருந்து சேவை இல்லை. காலை நேரத்தில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏற்றபடி அதிக பேருந்து வசதி இல்லை.
Recommended Video
இதனால் அவர்கள் வேறு வழியின்றி பேருந்தில் தொங்கியபடியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாத இறுதியில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து பொறையார் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

உடைந்த படிக்கட்டு
50 பயணிகள் செல்ல வேண்டிய பேருந்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் நெருக்கடியுடன் பயணம் செய்தனர். அருகே தரங்கம்பாடி சாலையில் சென்றபோது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென்று உடைந்து விழுந்தது. உடைந்து விழுந்த படிக்கட்டில் சில மாணவர்கள் நின்று பயணம் செய்து கொண்டிருந்தார். நல்லவேளையாக அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

கூடுதல் பேருந்துகள் வேண்டும்
இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அங்கு இன்னும் கூடுதல் பேருந்து சேவை தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு நோக்கி அரசு பேருந்து(வண்டி எண்: 1டி) சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அதிக அளவு பயணிகள் இருந்தனர்.

நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு..
திருமஞ்சன வீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதிகமாக பயணிகளை ஏற்றியதால் டிரைவர் பேருந்தினை இயக்க முடியாமல் தவித்துள்ளார். தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பேருந்து டிரைவர் பேருந்தினை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பேருந்து அரை மணி நேரமாக சாலையிலேயே நின்றுகொண்டிருந்தது.

பொதுமக்கள் கோரிக்கை
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்றும் செல்ல முடியாமல் தவித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து பேருந்தினை இயக்கும்படி டிரைவரிடம் கூறினார்கள். இதனை தொடர்ந்து வெகு நேரம் கழித்து அங்கு வந்த டிரைவர் பேருந்தினை இயக்கிச் சென்றார். மாணவர்கள் நலன் கருதி மயிலாடுறை மாவட்டத்தில் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications