திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

22மணி நேர ஊரடங்கு.. முழு ஒத்துழைப்பு அளித்த திருச்சி மக்கள்.. எப்படி இருந்தது திருச்சி

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் ரயில், பேருந்து நிலையங்கள்,பெரிய நிறுவனங்கள், கோயிலில் இன்று அதிகாலை 5 மணி வரை வெறிச்சோடி காணப்பட்டது 6 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. சுங்கச்சாவடிகளில் நேற்று ஒரு சில வாகனங்களே கடந்து சென்றன.

ஊரடங்கு உத்தரவையொட்டி திருச்சியில் ரயில், பேருந்து நிலையங்கள் நேற்று காலை முதல் இன்று அதிகாலை5 மணி வரை வெறிச்சோடி காணப்பட்டது.பின்னர் இன்று காலை 6 மணி அளவில் தான் திருச்சியில் மக்கள் நடமாட்டம் மற்றும் கடைகளை திறந்தார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவுறுத்தலின் படி, திருச்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பே திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. இதைத்தொடா்ந்து, நேற்று காலை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.

வெறிச்சோடிய ஸ்டேசன்

வெறிச்சோடிய ஸ்டேசன்

இதையடுத்து, ரயில்நிலையங்களில் குறிப்பிட்ட சில ரயில்களைத் தவிர பெரும்பாலான ரயில்கள் கிராப்பட்டி, ஜங்ஷன் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. ரயில்நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் எப்போதும் கூட்டமாக காணப்படும் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு மையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், வெளியூா் செல்லும் பயணிகள் தங்களது உறவினா்கள் வீடுகளிலேயே தங்கினா்.

மக்கள் நடமாட்டம் இல்லை

மக்கள் நடமாட்டம் இல்லை

இதனால், திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்ததோடு, பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்பட்ட புறநகர், மாநகா் பேருந்துகளில் குறைவான பயணிகளே பயணித்தனா். பெரும்பாலானோர் பேருந்தை புறக்கணித்து, இருசக்கர, வாடகை வாகனங்களை பயன்படுத்தினா். அதுபோல், குறிப்பிட்ட வணிக பகுதிகளைத் தவிர இதர சாலைகள், வீதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இரவு முழுவதும் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் பஸ்கள் போக தொடங்கியது. ஆனால் பொதூ மக்கள் குறைந்த அளவில் தான் பேருந்து நிலையத்தில் காண முடிந்தது .

வாகனங்களே இல்லாத நாள்

வாகனங்களே இல்லாத நாள்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து சென்றது. ஆனால் இன்று ஒரு சில வாகனங்கள் மட்டும் வந்து செல்கிறது என சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தார்கள்.

காவேரி பாலம்

காவேரி பாலம்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி கடைகள் மூடப்பட்டு வெறி சோடி காணப்பட்டது.அதேபோல் மக்கள் அதிகமாக இருக்கூடிய திருச்சி காவேரி பாலம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. திருச்சி ஒத்தக்கடை பகுதி, சிங்காரத்தோப்பு, தில்லை நகர், உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும் யாரும் காண முடியவில்லை. அதோடு முக்கிய இடங்களில் உள்ள பொழுது போக்கு பூங்காக்கள், விளையாட்டு மைதானத்திலும் வெறிச்சோடி காணப்பட்டது.

மணப்பாறை, துவரங்குறிச்சி

மணப்பாறை, துவரங்குறிச்சி

அதேபோல் திருச்சி புறநகர் மாவட்டங்களில் உள்ள மணப்பாறை, துவரங்குறிச்சி, வளநாடு, புத்தாநத்தம், வையம்பட்டி, முசிறி, துறையூர், திருவெறும்பூர், பெல் நிறுவனம், தாத்தையாங்கார் பேட்டை, துறையூர், முக்கெம்பு, உப்பிலியபுரம், லால்குடி, புள்ளம்பாடி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகள் மற்றும் முக்கிய வீதியில் வெறிச்சோடி காணப்பட்டது.

கடைபிடித்த மக்கள்

கடைபிடித்த மக்கள்

மத்திய மாநில அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவை நேற்று 9 மணிவரை இருந்ததை இன்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தியது இதை பொது மக்கள் அனைவரும் கடை பிடித்து வந்தார்கள். இன்று அதிகாலை வரையில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை. 5 மணிக்கு மேல தான் பொதுமக்கள் வெளியே வந்து தங்களது வழக்கமான பணிகளான உடற்பயிற்சி மற்றும் கோயில்களில் பொதுமக்களை காணமுடிந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
22 hours janatha curfew : trichy people gives full cooperation to government., people not walks roads, all shops closed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X