மீண்டு(ம்) வரும் ஏர் இந்தியா.. திருச்சி மக்களுக்கு டாட்டா சொன்ன குட்நியூஸ்.. என்ன தெரியுமா?
திருச்சி: 4 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் பணிபுரியும் டெல்டா மாவட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மஸ்கட், ஓமன், சிங்கப்பூர், துபாய், மலேசியா ஆகிய வெளிநாடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து தடைபட்டு இருந்தது.

இந்த நிலையில், கொரோனா பரவலின்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிறப்பு மீட்பு விமானங்களை திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இயக்கி வந்தது. இதனிடையே கடந்த 27 ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து அனைத்து வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதன் விளைவாக மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 27-ந் தேதி தொடங்கி உள்ளது. புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இரவு 10.10 மணிக்கு இந்த விமானம் இயக்கப்படும்.
அதேபோல் கோலாலம்பூரில் இருந்து திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் விமானம் இயக்கப்பட இருப்பதாகவும், அது இரவு 7.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் திருச்சிக்கு அருகாமையில் உள்ள டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பணி நிமித்தமாக தங்கி உள்ளனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது இவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications