பேய்க்காற்று.. திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்ட இரும்பு தடுப்புகள்.. பேராபத்து தவிர்ப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டு இருந்தன.
திருச்சி: திருச்சியில் இன்று கோடை மழை கொட்டித்தீர்த்தது. இந்த வேளையில் சூறைக்காற்று பயங்கரமாக வீசியது. இதையடுத்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்பு வேலிகள் தூக்கி வீசப்பட்டன. கார்கள் மீது விழுவது போல் சென்ற இரும்பு தடுப்பு வேலிகள் சென்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக பேராபத்து தவிர்க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆங்காங்கே கோடை மழை கொட்டுவதோடு, காற்றும் வீசுகிறது.
இதனால் கோடை வெயில் ஓரளவு தணிந்துள்ளது. இந்நிலையில் தான் வரும் நாட்களில் மழை ஓரளவு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் குளிர்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது.

நாளை வரை மழை
தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 19) முதல் நாளை (மார்ச் 20) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருச்சியில் பெய்த மழை
இந்நிலையில் இன்று பல இடங்களில் மழை பெய்தது. இதனால் மக்கள் ஓரளவு வெப்பத்தில் இருந்து தப்பித்தனர். இந்நிலையில் தான் திருச்சியில் இன்று கனமழை கொட்டியது. திருச்சி மாநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக திருச்சி புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சமயபுரத்தில் மழை கொட்டித்தீர்த்தது.

தூக்கி வீசப்பட்ட தடுப்பு வேலிகள்
இந்த வேளையில் சூறைக்காற்றும் வீசியது. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரும்பு தடபு்பு வேலிகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது. அதாவது நெடுஞ்சாலையின் ஒருபகுதியில் இருந்து சென்டர் மீடியனையும் தாண்டி மறுபுறத்துக்கு இரும்பு தடுப்பு வேலிகள் சென்றன.

வாகன ஓட்டிகள் பாதிப்பு
இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் மீது இரும்பு தடுப்பு வேலிகள் விழும் நிலை அங்கே நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரும்பு நெடுஞ்சாலைகளில் தூக்கி வீசப்பட்ட இரும்பு தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
40% ஏற்கனவே காலி.. இந்தியாவை தாக்கும் பேராபத்து? சாட்டிலைட் போட்டோவை பார்த்தால் நிலைமை புரியும் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications