திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எவ்வளவு துணிச்சல் பாருங்க.. திருச்சி அருகே.. போலீஸ்காரரை இடித்து தள்ளி சிட்டாக பறந்த கார்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அருகே சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் இருந்த காவலரை பொருட்படுத்தாமல் அவரை இடித்து விட்டு சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சையில் இருந்து திருச்சியில் நோக்கி செல்லும் காரை வழிமறிக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலை அடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அந்த காரை வழிமறித்தார்.

ஆனால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஓட்டுநர் சுங்கச்சாவடியின் தடுப்பை உடைத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார். இதையடுத்து காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்..

தாத்தா வயசு அவருக்கு.. திமுக நிர்வாகியை திருப்பி தாக்காதது ஏன்? நாதக ஹிம்லர் பரபர விளக்கம் தாத்தா வயசு அவருக்கு.. திமுக நிர்வாகியை திருப்பி தாக்காதது ஏன்? நாதக ஹிம்லர் பரபர விளக்கம்

கார் வேகமாக செல்வதாக தகவல்

கார் வேகமாக செல்வதாக தகவல்

திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக கார் ஒன்று சென்றுகொண்டிருப்ப��ாக திருச்சி மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. பின்னர் அந்த தகவல் துவாக்குடி காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த காரை மடக்கி பிடிக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடனடியாக சுங்கச்சாவடிக்கு சென்றார். அப்போது ஒவ்வொரு வாகனமும் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்ட காரும் அங்கு வந்து நின்றது.

தடுப்பை உடைத்து தப்பிய கார்

தடுப்பை உடைத்து தப்பிய கார்

அப்போது தடுப்பு மூடப்பட்டு காரில் உள்ளவர்களை விசாரிப்பதற்காக சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் நெருங்கினார். ஆனால் அவருக்கு பதில் சொல்ல விரும்பாத கார் ஓட்டுநர் உடனே அங்கிருந்து வேகமாக சென்றார். தடுப்பு இருந்ததையும் பொருட்படுத்தாமல் அதை உடைத்துக் கொண்டு கார் அங்கிருந்து பறந்து சென்றது. சுங்கச்சாவடியின் தடுப்பு காவல் ஆய்வாளர் சுரேஷ் மீது விழுந்ததில். அவர் நிலைகுலைந்து விழுந்தார். பின்னர் சுதாரித்து எழுந்த அவர் காரை பிடிக்க முயன்றார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்தில் கார் அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது. இதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேசுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் நுழையவில்லை

திருச்சி மாநகரில் நுழையவில்லை

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனத்தை தேடி வருகின்றனர். மேலும் காரை ஓட்டிச் சென்ற நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விஷயம் அனைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிவிக்கப்பட்டதால் திருச்சி மாநகரில் போலீசார் அதை பிடிக்க தயாராக இருந்தனர். ஆனால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என தெரிந்து கொண்ட கார் ஓட்டுநர் திருச்சி மாநகர எல்லைக்குள் வரமால் வேறு வழியில் தப்பிச் சென்றுள்ளனர். மேலும் போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புகாருக்குள்ளனா கார் வெள்ளை நிற ஸ்கார்பியோ என்பதும் அதன் பதிவெண் TN20 EE4779 என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த கார் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ஒருவரின் பெயரில் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

மீண்டும் ஒரு ஆய்வாளர் மீது தாக்குதல்

மீண்டும் ஒரு ஆய்வாளர் மீது தாக்குதல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சி அருகே ஆடு திருடுபவர்களை பிடிக்கச் சென்ற நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. பூமிநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரவு நேர ரோந்து பணியில் இருந்த பூமிநாதன் நள்ளிரவில் ஆடுகளுடன் சென்ற இருசக்கர வாகனங்களை துரத்தி சென்றபோது அந்த நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாவட்டத்திலேயே மேலும் ஒரு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Police are searching for a car that crashed into a policeman who was inspecting a vehicle at a toll plaza near Trichy. The Special sub Inspector of Police diverted the car following information from the control room to divert the car from Thanjavur to Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X