அண்ணாமலை பதவி விலக வேண்டும்.. செருப்பு வீச்சு சம்பவத்தால் கொதித்த காங்கிரஸ் எம்.பி!
திருச்சி : நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் காரின் மீதான பாஜகவினரின் செருப்பு வீச்சு சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பாதயாத்திரை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலை அருகிலிருந்து தொடங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபம் வரை பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

திருநாவுக்கரசர் எம்.பி
பாதையாத்திரை தொடங்குவதற்கு முன்னதாக, வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர், இந்த பாதயாத்திரை சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் தற்போது பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை பதவி விலக வேண்டும்
மேலும், மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க வினர் செருப்பு வீசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது காட்டுமிராண்டித்தனமான செயல். அமைச்சர் என்றில்லை, எந்தவொரு தனி மனிதன் மீதும் இதுபோன்ற தாக்குதலை நடத்தக்கூடாது. கருத்தைக் கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் திருநாவுக்கரசர்.

ஆளுநர் அரசியல்
தொடர்ந்து, தமிழக ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தொடர்பாகப் பேசிய திருநாவுக்கரசர், நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆனால், ஆளுநருக்கு என்று சில வரைமுறைகள் உள்ளது. அதை அவர் பின்பற்ற வேண்டும். ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை. ஆனால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது எனத் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications