அமைச்சரானபோது எழுந்த விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதிலடி தருகிறார் உதயநிதி: முதல்வர் பாராட்டு
திருச்சி: திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி அமைச்சரான போது விமர்சனம் எழுந்ததாகவும், அந்த விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் அமைச்சர் உதயநிதி பதில் சொல்லி வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கடந்த ஓரிரு மாதங்களாக முதுகுவலியால் சிரமப்பட்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையை ஏற்று வெளியூர் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார்.
இப்போது மீண்டும் வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தென்காசி, மதுரை பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்துள்ளார்.
இன்று காலை 9.45 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்கினார். தொடர்ந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சிறிய நிகழ்ச்சியையும் மாநாடு போல் நடத்துபவர் அமைச்சர் நேரு. திருச்சியில் சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரம்மாண்டமாகத்தான் நடக்கும். அதுதான் திருச்சி என்று அமைச்சரை நேருவை பாராட்டினார். தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஒரு ஆண்டில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளதாக கூறி அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி
பின்னர் உதயநிதி ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உதயநிதி அமைச்சரான போது விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதில் சொல்லி வருகிறார் அமைச்சர் உதயநிதி. உதயநிதி வகிக்கும் துறைகளை மேம்படுத்த வேண்டும் என முதல்வராக விரும்புகிறேன் என்று பாராட்டியதோடு அறிவுரையும் வழங்கினார்.

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி
தொடர்ந்து, ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் தமிழக இளைஞர்கள் சாதிக்க, உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்க தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அதற்கேற்ப திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மட்டுமல்லாமல் விளையாட்டிலும் தமிழ்நாடு முன்னேற்றமடைய வேண்டும்.

திராவிட மாடல்
இது அமைச்சர் உதயநிதிக்கு மட்டுமல்ல, அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு தான். திராவிட மாடல் அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவி செய்து வருவதற்கான அடையாளம் தான் இந்த விழா. சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் மகளிர் சமுதாயத்திற்காக, சிறப்பு திட்டங்களை உருவாக்குவதில் திமுக எப்போதும் முனைப்புடன் இருந்து வந்திருக்கிறது.

மகளிருக்கான திட்டங்கள்
மகளிருக்கான வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, உள்ளாட்சி மன்றங்களில் இடஒதுக்கீடு, இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிருக்கன சுய உதவிக்குழு என மகளிருக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகளிரின் வாழ்வும், கல்வியும், வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் உயர்ந்துள்ளது.

வெற்றி கிடைக்கும்
சிறப்பாக செயல்படக் கூடிய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அது நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின், மணிமேகலை விருது வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டு அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமாக கொள்கையுடன் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும் என்று சொன்னர் அண்ணா. அண்ணாவின் கூற்றுப்படி, சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றிக் கிடைக்கும்.

8,549 கிமீ பயணம்
2022ஆம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 8,549 கிலோமீட்டர் பயணித்திருக்கிறேன். 647 நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இது 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் 96. தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் மூலம் பயனடைந்தோர் எண்ணிக்கை 1,03,74,355 பேர். ஓராண்டில் மட்டும் நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்துள்ளது.

அண்ணா - கருணாநிதி
எந்த சூழலிலும் பயணமும், மக்கள் பணியும் நிறுத்தப்படவில்லை. நம்பர் 1 முதல்வர், நம்பர் 1 தமிழ்நாடு என்பதற்கான உண்மையான அளவுகோல், ஏழையின் சிரிப்பும், மகளிரின் மகிழ்ச்சியும் தான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னார். ஆனால் ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கருணாநிதியையும் காண்போம் என்பதே என் கொள்கை என்று தெரிவித்தார்.
-
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications