டிச.29ஆம் தேதி திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின்! முன்னேற்பாடுகள் முழு வீச்சில்! தீயாய் நடக்கும் வேலை
திருச்சி: வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருவதையொட்டி முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேஷும் மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

முதல்வர் சுற்றுப்பயணம்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை சுற்றுப்பயணம் செல்வதற்கு சலிக்கவேமாட்டார். தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி வர வேண்டும் என நினைக்கும் அவர், கடந்த ஓரிரு மாதங்களாக முதுகுவலியால் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையை ஏற்று வெளியூர் நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். அண்மையில் பெரம்பலூர், அரியலூர், மாவட்ட நிகழ்ச்சிகளிலும் அதைத் தொடர்ந்து தென்காசி நிகழ்ச்சியிலும் மட்டும் கலந்துகொண்டார்.

நேரில் ஆய்வு
இப்போது அடுத்தபடியாக வரும் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக வருகை தரவுள்ளார். அந்த விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் முன்னேற்பாடுகளை முழு வீச்சில் கவனித்து வருகின்றனர். அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஸும் அடிக்கடி அண்ணா விளையாட்டரங்க மைதானத்துக்கு சென்று பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்
அவர்களுடன் செல்லும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் மற்றும் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னேற்பாடுகளின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர். மழை பெய்தாலும் பயனாளிகள் நனையாத வண்ணம் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரிலும், கோவையிலும் காட்டிய பிரம்மாண்டத்தை விட திருச்சியில் ஒரு படி மேலாக பிரம்மாண்டம் காட்டப்படும் எனத் தெரிகிறது. ஏனெனில் அப்படித்தான் அங்கு முதல்வர் விழாவுக்கான ஏற்பாடுகள் இருக்கின்றன.

உதயநிதி பங்கேற்பு
திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முதல் வெளியூர் நிகழ்ச்சி திருச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications