திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின்! பிரம்மாண்டம் காட்டும் 2 அமைச்சர்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!
திருச்சி: நாளை மறுதினம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மாலை திருச்சி வருகை தருகிறார்.
அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேஷும் மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

முதல்வர் சுற்றுப்பயணம்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கியிருக்கிறார். கடந்த ஓரிரு மாதங்களாக முதுகுவலியால் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையை ஏற்று வெளியூர் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த இவர், இப்போது மீண்டும் பரபரப்பாக வெளியூர்களுக்கு விசிட் அடித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி செல்லும் அவர் அங்கு லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.

நேரில் ஆய்வு
முதல்வர் பங்கேற்கும் விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் முன்னேற்பாடுகளை முழு வீச்சில் கவனித்து வருகின்றனர். அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஸும் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு அறிந்து கொள்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம்
மாவட்ட ஆட்சியர் பிரதீப் மற்றும் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னேற்பாடுகளின் நிலை குறித்து விரிவாக அமைச்சர்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். மழை பெய்தாலும் பயனாளிகள் நனையாத வண்ணம் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டும் பிரம்மாண்டத்தை விட திருச்சியில் ஒரு படி மேலாக பிரம்மாண்டம் காட்டப்படும் எனத் தெரிகிறது.

உதயநிதி பங்கேற்பு
திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திண்டுக்கல், சிவகங்கை, கோவை என மூன்று மாவட்டங்களுக்கு விசிட் அடித்திருக்கும் நிலையில் 4வது மாவட்டமாக திருச்சிக்கு அவர் வருகை தருவார் எனக் கூறப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications