திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

350 ஏக்கர் பரப்பளவு; 3 பிரமாண்ட மேடைகள்; 10 லட்சம் தொண்டர்கள்... திருச்சியில் மாஸ் காட்டும் திமுக!

Google Oneindia Tamil News

திருச்சி: திமுக கூட்டணியுடன் தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடித்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது.

Recommended Video

    திருச்சி: 90 அடி உயர கொடிக்கம்பத்தில்... கட்சி கொடி ஏற்றினார் மு.க.ஸ்டாலின்!

    திருச்சி மாநாட்டில் பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி மட்டும் 350 ஏக்கரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்டாலின், உதயநிதி ஒன்றாக இருக்கும் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. ''கட்சியின் அடுத்த எதிர்காலமே'' என்று உதயநிதியைப் புகழ்ந்து வைத்த பாதாதைகளும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரான திமுக

    அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரான திமுக

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களைகட்டியுள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு வழியாக முக்கியமான கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது திமுக. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை அசால்டாக டீல் செய்த திமுக, காங்கிரசை சம்மதிக்க வைக்க கொஞ்சம் பாடுபட்டது. ஆனால் இறுதியில் 25 தொகுதிகளை ஒதுக்கி காங்கிரஸையும் சரிகட்டியது. இந்த நிலையில் தேர்தலுக்கான அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு திமுக தயாராக உள்ளது.

    பிரமாண்ட திருச்சி மாநாடு

    பிரமாண்ட திருச்சி மாநாடு

    தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள திருச்சியில் தேர்தலுக்கு முன்னோட்டமாக 11-வது மாநில மாநாடு நடத்த முடிவு செய்தார் ஸ்டாலின். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த மாநாட்டை தேர்தல் பொதுக்கூட்டமாக மாற்ற முடிவு செய்தார். இதற்கான அசைன்மெண்ட் திருச்சியின் நாயகன் கே.என்.நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கமாக திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யும் கே.என்நேரு இந்த முறை சும்மா இருப்பாரா? அட்டகாசபடுத்திவிட்டார்.

     250 அடி பிரம்மாண்டமான எல்.ஈ.டி ஸ்கிரீன்

    250 அடி பிரம்மாண்டமான எல்.ஈ.டி ஸ்கிரீன்

    திருச்சி பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையான சிறுகனூரில் மாநாடு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெற்றது.பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி மட்டும் 350 ஏக்கரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 90 அடி உயர திமுக கொடிக்கம்பமும் நட்டு வைக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 250 அடி பிரம்மாண்டமான எல்.ஈ.டி ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.

    3 மேடைகள்

    3 மேடைகள்

    மாநாடு நடைபெறும் இடத்தில் மொத்தம் 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேடை எம்.எல்.ஏ க்களுக்கும், 2-வது மேடை தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மு.க.ஸ்டாலின் உட்காரும் வகையிலும், 3-வது மேடை மாவட்ட செயலாளர்களுக்கும் என அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரத் தொடங்கி விட்டனர். அங்கு திமுக தொண்டர்கள் உட்காருவதற்காக 5 லட்சம் சேர்கள் கொண்டு வரப்படுகின்றன. சுமார் 10 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாலின், உதயநிதி ஒன்றாக இருக்கும் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. ''கட்சியின் அடுத்த எதிர்காலமே'' என்று உதயநிதியைப் புகழ்ந்து பாதாதைகளும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    The public concourse and spectator seating area at the Trichy Conference alone are vastly set up on 350 acres
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X