“முகம் சுழிக்கும் அளவுக்கு பேச்சு”.. திமுகவுக்கு திருமாவளவன் சொன்ன அதிரடி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆ.ராசா, சேகர் பாபு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஆர்ப்பாட்ட மேடையில் திமுகவினருடைய பேச்சு பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: ஆ.ராசா மீதும், சேகர்பாபு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக விமர்சிப்பதை தாண்டி, தனிநபர் மீது ஒருமையில் விமர்சிப்பது என்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

dmk-leaders-speeches-make-people-turn-away-thirumavalavan-urges-dmk-to-self-reflect

முகம் சுழிக்கும் பேச்சு

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு நீண்ட நெடிய பாரம்பரிய உள்ள அரசியல் பேரியக்கம். தந்தை பெரியாரின் கொள்கை பாசறையில் உருவான இயக்கம். தன்னைப் பற்றியும், தன்னுடைய பிறப்பை பற்றி கொச்சையாக விமர்சனம் செய்த காலத்தில் அண்ணா நாகரிக வரம்பு மீறாமல் எதிர்கொண்டனர். அதேபோல, கலைஞரை மிக கொச்சையாக விமர்சித்த காலத்தில் அவரும் அதனை எதிர்கொண்ட முறை என்பது எப்போதுமே வியப்பளிக்கக் கூடியது. அவரும் ஒருபோதும் வரம்பை மீறியதில்லை.

முன்னாள் முதல்வரோடு தொடர்ந்து 15 ஆண்டுகள் நாங்கள் தொடர்ந்து பயணித்திருக்கிறோம். அவரும் நாகரிக வரம்புகளை மீறி பேசியதாக எதுவும் இல்லை. ஆனால், தற்போது ஆர்ப்பாட்ட மேடையில் அவர்கள் பேசிய பேச்சு பொதுமக்களை முகம் சுழிக்கும் அளவுக்கு அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. தமிழ்நாடு அரசு விவசாயிகள் மீது போடப்பட்ருந்த வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.

அம்பேத்கர் சிலை

ஆனால், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாட்டில் விவசாயிகள் முழுமையாக திருப்தி அடையவில்லை. இதுதொடர்பான கோரிக்கையை முதல்வரின் கவனத்தில் எடுத்துச் சென்றுள்ளேன். அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

அம்பேத்கர் சிலைகள் அவமதிக்கப்படும் நிகழ்வு தொடர்ந்து நடத்தப்படு வருவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்ற சம்பவங்கலைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து, விசிக, திமுக இடையேயான கூட்டணி குறித்து எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

நீண்டகாலமாக திமுகவுடன் பயணித்து வருகிறோம். அவர்களுடன் நாங்கள் எப்படி பயணித்தோம், பணியாற்றினோம் என்று ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். ஆனால், திமுகவுக்கு ஆதரவாகப் பேசுகிறோம் என்கிற பெயரில் சில பேர் எங்கள் மீது தேவையில்லாத அவதூறுகளைப் பரப்புகின்றனர். துரோகப் பட்டத்தை சூட்டுகிறார்கள்.

சுய விமர்சனம் செய்ய வேண்டும்

திமுக கூட்டணியில் இருந்து பதவிக்காக வெளியேறினோம் என்கிற தவறான தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல. அது எங்களுடைய தலைமைத்துவத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்படுகிற தாக்குதலாகவே இதைப் பார்க்கிறேன். 4 மாதங்களாக தொடர்ந்து இதைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். விசிக பதவி ஆசைபிடித்து திமுக கூட்டணியை விட்டு துரோகம் இழைத்துவிட்டு ஓடியது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆகவே, திமுக தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளும் தேவையிருக்கிறது என்ற கோணத்தில் சுட்டிக் காட்டுகிறேன் என்றார்.

தமிழ்நாட்டில் மின்வெட்டு இருப்பது உண்மை தான். அரசு இதில் கூடுதல் கவனம செலுத்தி சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் சொல்கின்ற தகவல்களைக் கொண்டு தான் அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். அதிகாரிகள் முறையான தகவல்களை அமைச்சர்களுக்குத் தர வேண்டும்.

ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, உங்கள் மூலம்தான் தெரிய வருகிறது. அவர் விரைந்து குணமடைய வேண்டும். என்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பின்பு மருத்துவமனையில் நேரில் சென்று சந்திப்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+