Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி.. திருச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ் ரகுபதி. இவர் சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் ஊழல் தடுப்புசட்டம் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார்.

ragupathy regupathy trichy

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் இவரும் ஒருவர். அமைச்சரவையில் இவருக்கு 11 இடத்தில் உள்ளார். தற்போது மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். திருச்சியில் வைத்து அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ரகுபதிக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரகுபதி மருத்துவமனையில் நலமாக உள்ளார். தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட செய்தி அவரது ஆதரவாளர்களை கவலையடைய வைத்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரகுபதிக்கு இப்போது 74 வயது ஆகிறது. இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த 1991, 2016 சட்டசபை தேர்தலை தொடர்ந்து 2021 ல் நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாகி உள்ளார். இவர் இதற்கு முதன் முதலில் அதிமுகவில் பயணித்தார்.

1991ல் அதிமுக சார்பில் தான் திருமயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு தான் திமுகவுக்கு வந்தார். திமுக சார்பில் இந்த தொகுதியில் 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் வென்றுள்ளார். இப்போது அவர் சட்டத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+