• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அவர் பெயர் முகமது பாபு.. ஏன் மிட்டாய்பாபுன்னு சொல்றீங்க.. எல்லா வீட்டிலும் ரெய்டு பண்ணுங்க..எச்.ராஜா

|

திருச்சி: "முகமது பாபு என்கிற பேரை ஏன் மாத்தி சொல்றீங்க? ஊடகங்களும் போலீசும் மிட்டாய் பாபுன்னு சொல்றாங்க.. இந்த கொலை பர்சனல் மோடிவேஷனுக்காக நடந்ததுன்னு ஐஜி அமல்ராஜ் சொல்றார்.. அப்படி கிடையாது.. தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.. முதல்ல பாலக்கரையில எல்லா வீடுகளிலும் சோதனை நடத்தணும்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி பாலக்கரை பாஜக பிரமுகர் விஜயரகு 2 தினங்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர்.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜகவும் வலியுறுத்தி வந்த நிலையில், மிட்டாய் பாபு உள்ளிட்ட 2 பேரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

மார்கெட்டில் ஓட ஓட விரட்டி.. பாஜக பிரமுகர் வெட்டிகொலை.. மிட்டாய் பாபு கேங் அட்டகாசம்.. திருச்சியில்!

அமல்ராஜ்

அமல்ராஜ்

இதனிடையே, இந்த கொலை சம்பவம் மதரீதியானது கிடையாது, குடும்ப தகராறு என்று திருச்சி கமி‌ஷனர் அமல்ராஜ் விளக்கம் அளித்தும், தொடர்ந்து பாஜக பிரமுகர்கள் இவ்வாறு இனரீதியாகவும், போலீசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை நாளுக்கு நாள் கூட்டி வருகிறது. படுகொலை செய்யப்பட்ட விஜயரகு குடும்பத்தினரை பாஜக பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

எச்.ராஜா

எச்.ராஜா

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தும் அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்.. செய்தியாளர்களிடம் பேசும்போது, "மிட்டாய் பாபு என்கிற முகமது பாபு யார் தெரியுமா? எந்த இடத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக நோட்டீஸ் தந்தாரோ, அதே இடத்தில்தான் பாஜக பிரமுகர் விஜயரகு கொல்லப்பட்டுள்ளார்.. இது குடும்ப தகராறு கிடையாது.. இது ஒரு ‘லவ் ஜிகாத்' தாக்குதலாக கூட இருக்கலாம். அதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்" என்றார்.

நிதியுதவி

நிதியுதவி

இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் விஜயரகு குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.. ரூ.50 ஆயிரம் நிதி உதவியையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு என்ற பெயரால் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக விஜயரகு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

குடியுரிமை திருத்த சட்டம்

குடியுரிமை திருத்த சட்டம்

தடை செய்யப்பட்ட இயக்கங்களை முன்னிறுத்தி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இந்த கொலைக்கு காரணமான முகமது பாபு என்பவரின் பெயரை ஊடகங்களும் போலீசும் மிட்டாய் பாபு என்று மாற்றி சொல்கிறார்கள்.. ஊடகமே பயங்கரவாதியை கண்டு பயப்படலாமா? அப்படின்னா ஜனநாயகத்தை எப்படி காப்பாத்தறது?

பாலக்கரை

பாலக்கரை

இந்த கொலை பர்சனல் மோடிவேஷனுக்காக என்று சொல்கிறார்கள்.. பர்சனல் என்றால் கொலை செய்யலாமா? ஐஜி அமல்ராஜ் ஏன் அப்படி பேசினார் என்றே தெரியவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மாநில அரசு அனுமதியே தரக்கூடாது.. போலீஸ்காரர்களே பயங்கரவாதிகளை கண்டு பயப்படக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.. திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள எல்லா வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்த வேண்டும்.

பாரபட்சம்

பாரபட்சம்

இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு விஜயரகுவின் படுகொலை ஓர் உதாரணம். போலீசார் இப்படி ஒரு தலைபட்சமாக பாரபட்சமாக இருப்பது, இத்தகைய படுகொலை நடக்க காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் கூட வருகிறது. அமல்ராஜ் சொல்லிட்டாரு அப்படிங்கிறதுக்காக விவகாரத்தை திசை திருப்பாமல் காவல் துறையினர் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

 
 
 
English summary
bjp national secretary h raja tn police inaction over murder trichy bjp person vijayaraghu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X