திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி.. கல்லணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது!

Google Oneindia Tamil News

திருச்சி: டெல்டா மாவட்டங்களின் பாசனத்தை பூர்த்தி செய்யும் வகையில் கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 12-ம் தேதி முதல்வர் மேட்டூர் அணையில் திறந்த தண்ணீர் இன்று கல்லணை வந்தடைந்துள்ளது.

Recommended Video

    டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி.. கல்லணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது!

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கியமானது காவிரி.

    வரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையாவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா

    தண்ணீர் திறப்பு

    தண்ணீர் திறப்பு

    டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12 ஆம் தேதி காலை திறந்து வைத்தார். அந்த நீரானது கல்லணைக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது. இதனையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை அரியலூர் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.

    கே.என் நேரு

    கே.என் நேரு

    அமைச்சர்கள் பன்னீர் செல்வம், கே.என் நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு காவிரி ஆற்று மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தனர் காவிரியிலிருந்து 2000 கன அடி வெண்ணாற்றிலிருந்து 2000 கன அடி கல்லணை கால்வாயிலிருந்து 2O00 கன அடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து 1000 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    10 நாட்கள் ஆகும்

    10 நாட்கள் ஆகும்

    இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- கல்லணைக்கு தண்ணீர் வருவதைப் பொருத்து, காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்து திறக்கப்படும். கல்லணையிலிருந்து தற்போது திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 10 நாட்கள் ஆகும்.

    பாசன வசதி

    பாசன வசதி

    தூர்வாரும் பணி இதுவரை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண்ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீத பணிகள் முடிவடைந்து விடும் என்று கே.என்.நேரு கூறினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.04 லட்சம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 89 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 5,000 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கரும், கடலூர் மாவட்டத்தில் 16,000 ஏக்கரும் என, மொத்தம் 3.10 லட்சம் ஏக்கரில் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kallanai Dam water opens for delta district in tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X