வன்மத்தை கக்காமல் இருங்க.. கவுன்சிலர் சீட்டாவது கிடைக்கும்! சீமானுக்கு ரமேஷ் கொடுத்த சீரியஸ் அட்வைஸ்
திருச்சி: இடைத்தேர்தலை சந்திக்க வெறியோடு காத்திருக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். இந்த நிலையில் வெறுப்பு அரசியலை விதைப்பதை விட்டுவிட்டு உண்மையிலேயே வெற்றி பெறும் நோக்கத்தோடு செயல்பட்டால், உள்ளாட்சி தேர்தலிலாவது வெற்றி பெற வாய்ப்புள்ளது என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஒளியவில்லை என்றால் தைரியமாக களத்தில் நிற்க வேண்டியதுதானே எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மாமன்னர் தீரன் சின்னமலையின் 212வது நினைவு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டும் வகையில் ஆட்சியில் நடத்தி வருகிறார். வரலாற்றிலேயே மிகுந்த மாற்றத்தை உருவாக்கி வருகிறார். மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
அமைச்சர் ரமேஷ்
இன்று வாக்களிக்காதவர்கள் கூட மகிழ்ந்திருக்கு படியான நம்முடைய முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். முதல்வர் விஜய் தனித்து விடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யார் தனித்து விடப்பட்டுள்ளார் என மைக்கை நீட்டி கேட்டால் தெரியும். முன்னாள் சட்டமன்றத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கும் வகையில் தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அது மக்களுக்கு தெரியும்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
மேகதாது பிரச்சனை குறித்து முதல்வர் பேசவில்லை எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் நடத்த ஏன் தாமதம் என சொல்கிறார்கள். எல்லா விஷயத்தையும் பேசி செய்ய வேண்டிய அவசியமில்லை. செயலில் காட்டினாலே போதும். எங்கள் முதல்வர் செயலில் காட்டக்கூடிய முதல்வர். திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவரிடம் சுவாமி தரிசனத்திற்காக 2000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. எல்லா கோயில்களுக்கும் இது போல் நடந்து வருகிறது. இதை சரி செய்து வருகிறோம்.
சீமான்
எனக்கும் தகவல் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிவில் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பாராபட்சமும் பார்க்கப்படாது. இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்திருப்பதாக சீமான் கூறியிருக்கிறார். அவரும் 15 வருடமாக பயிற்சி பணிகள் என்று கூறி இன்னும் பயிற்சி செய்து கொண்டே இருக்கிறார்.
வெறுப்பு அரசியல்
இதுபோன்று வெறுப்பு அரசியலை விதைப்பது, தலைவருக்கு எதிராக பேசுவதை விட்டுவிட்டு உண்மையிலேயே வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு செயல்பட்டால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என அவரை கேட்டுக்கொள்கிறேன். விவசாய சங்கங்களில் பேசி நிறைய கோரிக்கைகளை வழங்கியுள்ளனர். அது சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொடுத்துள்ளோம். அவர் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கோரிக்கையை ஏற்று நடவடிக்கைகள் எடுக்கப்பார்.
தவெக
நான் ஓடி ஒளியவில்லை தவெக என் மீது பொய்யான வழக்கு தொடுத்துள்ளது என செந்தில் பாலாஜி கூறி உள்ளார். அப்படி ஓடி ஒளியவில்லை என்றால் எங்கே காணமல் போனார்கள். தைரியமாக நிற்க வேண்டியதுதானே.. கோர்ட் என்ன செல்கிறது என்று பார்க்க வேண்டியது தானே.. களத்தில் வந்து சந்திக்க வேண்டியது தானே.. இந்த ஆட்சியை பொறுத்தவரை ஊழல் செய்த யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்." என்றார்.


Click it and Unblock the Notifications
