பார்க்கத்தான் வெறும் சில்லறை.. அவ்வளவும் மின்னும் தங்கம்.. 2 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்!
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
திருச்சி: பார்க்கத்தான் வெறும் சில்லறை காசுகள்.. அவ்வளவும் தக தகவென மின்னும் தங்க கட்டிகள்.. துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.53.83 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
எவ்வளவுதான் தமிழக ஏர்போர்ட்களில் அதிகாரிகள் படு கண்டிப்பாக இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகளும் இவர்களை வளைச்சு வளைச்சு கைது செய்து, ஜெயிலில் அடைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதிலும் திருச்சி ஏர்போர்ட்டில் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இன்று காலைகூட துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை நடத்தினர்.
இதில் ஒருவரது செயல் மட்டும் வித்தியாசமாக தெரியவும், அவரை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போதுதான், திருவாரூரை சேர்ந்த முகமது சுலைமான் என்பவர் ரூ.6.98 லட்சம் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், கொஞ்ச நேரத்திலேயே இன்னொருவரை மடக்கி பிடித்தனர்.

அதே விமானத்தில் வந்த அந்த நபர் பெயர் பஷீர் அகமது. இவரிடம் எக்கச்சக்கமாக சில்லறை காசுகள் இருந்தன. ஓரளவு சில்லறை இருந்திருந்தாலும் டவுட் வந்திருக்காது.. ஆனால் இவர் அளவுக்கு அதிகமாக சில்லறை கொண்டு வரவும் அவரை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அப்போதுதான் அவை அனைத்துமே தங்க காசுகள் என்பது தெரியவந்தது.
அதாவது, ரூ.46.85 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சில்லறைகளாக மாற்றி கொண்டு வந்துள்ளார் பஷீர் வைத்திருந்தார். இதையடுத்து 22 தங்க காசுகளும், கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் இருந்தும் 1.433 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு மொத்தம் 53.83 லட்சம் என்கிறார்கள். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications