4 மர்ம முடிச்சுகள்.. ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகப் பார்வையில் சிக்குகிறாரா சசிகலா? பரபர தகவல்!
திருச்சி : திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைக் கரங்கள் சசிகலாவை நோக்கி நீள்வதாக தகவல்கள் பரபரக்கின்றன.
ராமஜெயம் கொலை குறித்து சிபிசிஐடி, சிபிஐ என்று மாறி மாறி விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடந்து வருகிறது.
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ரவுடிகள் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சசிகலா பக்கமும் போலீசார் பார்வையைத் திருப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமஜெயம் கொலை நடந்த நாளில் தான், சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார் என்பதாலும், அவரை சந்தேகப் பிடிக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராமஜெயம் கொலை வழக்கு
கடந்த 2012ஆம் ஆண்டு மார் 29ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட், காண்ட்ராக்ட் என திருச்சி பகுதியில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வந்த ராமஜெயம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10 ஆண்டுகள் கடந்தும், ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ராமஜெயம் கொலை தொடர்பாக தகவல் சொல்பவர்களுக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டது.

உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சந்தேக வளையத்தில் 20 பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் சமீபத்தில் திருச்சி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா கோபம்
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 2011 சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்கச் சென்ற இடங்களில் எல்லாம் திமுக அமைச்சர்களை விமர்சித்தது போல ராமஜெயத்தையும் கடுமையாக விமர்சித்தார். அந்தளவுக்கு ஜெயலலிதா ராமஜெயம் மீது கோபமாக இருந்த நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ராமஜெயம் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

ரவுடிகள் - சந்தேகப் பார்வை
இந்தச் சூழலில் தான், ராமஜெயம் கொலை வழக்கில் சசிகலா மீதும் சிபிசிஐடி போலீசாரின் சந்தேகப் பார்வைகள் விழுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் சம்பந்தி ஜெயச்சந்திரன் திருச்சியில் டி.எஸ்.பியாக இருந்த போதுதான் ராமஜெயம் கொலை நடந்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சில ரவுடிகள் மற்றும் சாமி ரவி என்பவரும் ராமஜெயம் கொலை வழக்கில் இறுதிக்கட்ட விசாரணையில் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த ரவுடிகள் சசிகலா சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சசிகலா நீக்கமும் - சேர்ப்பும்
அதுபோக, அதிமுகவில் அதிகார மட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய சசிகலா, ஜெயலலிதாவால் போயஸ் கார்டனில் இருந்து சில காலம் வெளியேற்றப்பட்டிருந்தார். 2011 டிசம்பரில் வெளியேற்றப்பட்ட சசிகலா மீண்டும் 2012 மார்ச் மாதம் 31ஆம் தேதி சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதாவது, ராமஜெயம் கொலை நடந்த 2 நாட்களில். ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக மார்ச் 29ஆம் தேதியே சசிகலா போயஸ் தோட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

4 மர்ம முடிச்சுகள்
1. ராமஜெயம் மீது ஜெயலலிதா கோபமாக இருந்தது, 2. ராமஜெயம் கொலை வழக்கின்போது சசிகலாவின் உறவினர் ஜெயச்சந்திரன் திருச்சியில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியது, 3. ராமஜெயம் கொலையில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் ரௌடிகள் சசிகலாவின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது, 4. ராமஜெயம் கொலை நடந்த அன்றே சசிகலா, போயஸ் கார்டனுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டது ஆகிய காரணங்களை முடிச்சுப் போட்டு சசிகலா பக்கம் சந்தேகப் பார்வையை திருப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து இறுகும் பிடி
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் ரிப்போர்ட், சசிகலாவை குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், இப்போது ராமஜெயம் கொலை வழக்கும் சசிகலாவை நோக்கி திரும்பி இருப்பதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், சசிகலா மீதான பிடி வரும் நாட்களில் இறுக்கப்படலாம் என்ற செய்திகளும் அலையடிக்கத் தொடங்கியுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications