சாட்டை துரைமுருகன் எங்கே என்று தெரியவில்லை.. போலீஸ் கமிஷனரிடம் மனைவி மாதரசி பரபரப்பு புகார்
திருச்சி: வதந்தி பரப்பிய புகாரில் சாட்டை துரைமுருகன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சாட்டை துரைமுருகன் மனைவி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதிகளில் வழங்கப்பட்ட தரமற்ற உணவால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சனிக்கிழமை சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

சாட்டை துரைமுருகன் கைது
இது தொடர்பாகச் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்ரில் வதந்தி பரப்பும் வகையிலான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். தனது முதல் ட்வீட்டில், 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் அடுத்த ட்வீட்டில், "சீன நிறுவனமான Foxconnல் பணிபுரிந்த பெண்களில் 57 பேருக்கு நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் வாந்தி மயக்கம். இதுவரை 9 பெண்கள் இறந்துள்ளனர். ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில், சாட்டை துரைமுருகனை ஞாயிற்றுக்கிழமை (டிச.10) அவர் திருச்சி மாவட்டம், பிராட்டியூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து திருச்சி தில்லைநகர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்யப்பட்டார்.

மனைவி புகார்
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அவரது மனைவி மாதரசி இரவு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள உளவுத் துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் மனுவில் தனது கணவர் (சாட்டை துரைமுருகன்) போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பிரபு பரபரப்பு பேட்டி
இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகனின் வழக்கறிஞர் பிரபு கூறுகையில், "காவல்துறையினர் தன்னை கைது செய்ய வந்திருப்பதாகச் சாட்டை துரைமுருகன் எனக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்குச் சென்றதாகத் தெரிவித்தனர்.

எந்த தகவலும் இல்லை
இருப்பினும், நாங்கள் சென்று பார்த்த போது அங்கு அவர் அங்கு இல்லை. இதைத்தொடர்ந்து அதே போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரை கே.கே நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். அங்குச் சென்று பார்த்தபோதும், அங்கும் அவர் இல்லை. தொடர்ந்து காவல்துறையினர் எங்களை அங்கும் இங்கும் அலைக்கழித்து வருகின்றனர். எதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது கூட எங்களுக்குத் தெரிவிக்காமல் காவல்துறை செயல்படுகிறது.

ஒப்படைக்க வேண்டும்
சாட்டை துரைமுருகன் மீது யார் குறிப்பிட்டு யார் புகார் கொடுத்தார். எங்கே புகார் கொடுத்தார் என்று எந்த தகவலையும் போலீசார் எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. காவல்துறையினரும் முறையான தகவல்களை எங்களுக்குத் தெரிவிக்க மறுக்கின்றனர். உடனடியாக காவல்துறை அவரை அவரை கண்டறிந்து குடும்பத்துடன் ஒப்படைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். சாட்டை துரைமுருகன் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தற்போது தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications