விலைவாசி உயர்வுக்கு விஜய் அரசு மட்டுமே காரணம் இல்லை.. நிறைய பிரச்சனை இருக்கு! திருமா சொன்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: விலைவாசி உயர்வுக்கு ஒரு குறிப்பிட்ட அரசையோ அல்லது ஆட்சியாளர்களையோ மட்டுமே முழுமையாகப் பொறுப்பாக்க முடியாது. அவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் எனவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொளவதற்காக திருச்சி வந்தார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Thirumavalavan Vijay Delimitation

அப்போது பேசிய அவர்," விலைவாசி உயர்வு எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கும். குறிப்பாக, அரிசியின் விலை உயரும்போது ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருமாவளவன்

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனவே, எளிய மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, ஒன்றிய அரசும் மாநில அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வுக்கு ஒரு குறிப்பிட்ட அரசையோ அல்லது ஆட்சியாளர்களையோ மட்டுமே முழுமையாகப் பொறுப்பாக்க முடியாது. அவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும். உலகச் சந்தையில் நிலவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலைவாசி உயர்வுக்குப் பின்னணியில் இருக்கலாம். இருப்பினும், சாதாரண மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய் ஆந்திரா மற்றும் கர்நாடக முதல்வரை சந்தித்து நதிநீர் இணைப்பு குறித்து பேசி உள்ளார். தண்ணீர் இல்லாத சூழலில் இது குறித்து பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என எதிர்கட்சிகள் கூறியுள்ளன. நதிநீர் இணைப்பு என்பது நீண்ட கால திட்டம். இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் இயற்கைக்கு எதிராக இருக்கும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து வேண்டுமானால் நாம் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ கருத்து சொல்லலாம்.

நதிநீர் இணைப்பு

ஆனால் நதிநீர் இணைப்பே கூடாது, இப்போதைக்கு தண்ணீர் இல்லை ஆகவே இந்த பேச்சுவார்த்தை பயனற்றது என கூறுவது அரசியல் அடிப்படையிலான விமர்சனம். தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது திமுக என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது, நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெற பாஜக அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுதி மறுவரையறை

இத்தகைய சூழலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
ஏற்கெனவே எடுத்த அதே நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன். தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அப்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த வகையிலும் அந்த எண்ணிக்கையை அதிகரிப்பது தேசத்தின் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் உகந்ததல்ல என்பதுதான் எங்களது நிலைப்பாடு" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+