இன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் சென்னை, பெங்களூருக்கு விமான சேவை துவங்குகிறது. இரண்டு விமானங்கள் சென்னைக்கும், ஒரு விமானம் பெங்களூருவுக்கும் வந்த செல்ல உள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைவான அளவில் விமான சேவைகள் தொடங்கப்பபடுகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் புயல் பாதிப்பு காரணமாக விமான சேவை 28ம் தேதி துவங்குகிறது. அந்த நகருக்கு மட்டும் விமானங்கள் மற்ற நகரங்களில் இருந்து செல்லாது. மற்றபடி, மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் இடையே விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்வர்களும் அந்த மாநில அரசிடம் இ பாஸ் வாங்க வேண்டியது கட்டாயம் ஆகியுள்ளது. அதேபோல் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கி கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை பெங்களூருவுக்கு விமான சேவைகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. சென்னைக்கு இரண்டு முறையும் பெங்களூருவுக்கு ஒருமுறையும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அதற்கான அட்டவணையை திருச்சி விமான நிலைய மேலாளர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி 6E-7145 என்ற விமானம் சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 10.45 மணிக்கு வந்து சேருகிறது. அதேவிமானம் (6E-7146) காலை 11.15மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது
இதேபோல் 6E-7738 என்ற விமானம் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு இரவு 8.20 மணிக்கு வந்து சேருகிறது. அதன்பிறகு அதேவிமானம் (6E-7739) இரவு 8.55 மணிக்கு திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறது.
6E-7149 என்ற விமானம் சென்னையில் இருந்து திருச்சிக்கு இரவு 9.20 மணிக்கு வந்து சேருகிறது. அதேவிமானம் (6E-7151) இரவு 9.50 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது
-
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?











Click it and Unblock the Notifications