டிக்கெட் எடுக்காமல் பயணம் - திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் ரூ.7.38 லட்சம் அபராதம் வசூல்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், டிக்கெட் இன்றி பயணித்த 408 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7.38 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கியமானது ரயில் சேவை. அந்த வகையில் இந்திய ரயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். மற்ற பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒப்பிடும்போது ரயில் கட்டணம் மிகவும் குறைவு.

train travel without ticket

ரயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, இதற்கு முன்பு 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ஒரே நாளில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி வழிகாட்டுதலின் கீழ், திருச்சி முதுநிலை கோட்ட வணிக மேலாளர் பு. வெங்கடராகவன் தலைமையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று, திருச்சி கோட்டத்தில் சிறப்பு டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் டிக்கெட் இன்றி பயணித்த 545 பயணிகளுக்கு ரூபாய் 4,44,474 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக் கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணித்த 396 பயணிகளுக்கு ரூபாய் 2,84,379 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் லக்கேஜ் கொண்டு வந்த 7 பயணிகளிடம் ரூபாஉ 3,180 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதர விதிமீறல்களுக்காக 5 பயணிகளிடம் ரூபாய் 6,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரே நாளில் 953 பயணிகளிடம் ரூபாய் 7,38,233 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கோட்ட டிக்கெட் பரிசோதனைக் குழுவினரால் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அபராதத் தொகை இதுதான் என் திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+