என்ன அடாவடி இது.. அன்னபூரணியை பார்த்து.. சந்திரமுகியாக மாறிய TikTok சாதனா.. வேறலெவல் பெர்பார்மன்ஸ்!
திருச்சி: அன்னபூரணி போலவே அருள்வாக்கு வழங்கி TikTok புகழ் திருச்சி சாதனா வெளியிட்ட வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
சமீபத்தில் தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி பரபரப்பை கிளப்பியவர் அன்னபூரணி. ஆதிபராசக்தி அம்மாவின் அவதாரம் என்று தன்னை விளம்பரப்படுத்தி வரும் அன்னபூரணி தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் ஜனவரி 1ம் தேதி அருள் தரப்போவதாக செங்கல்பட்டில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி போலீசார் மூலம் தடை செய்யப்பட்டது. கடைசியில் சர்ச்சைகளுக்கு பின் தான் வெறும் ஆன்மீக பயிற்சி மட்டுமே வழங்குவதாக இவர் விளக்கம் அளித்தார்.

திருச்சி சாதனா
இந்த நிலையில்தான் அன்னபூரணி போலவே இன்னொரு பெண்மணி சாமியார் கெட்டப் போட்டு மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. TikTok பிரபலம் திருச்சி சாதனா தனக்கு அம்மன் கெட்டப் போட்டு இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சிவப்பு புடவை அணிந்து, நெற்றி முழுக்க குங்குமம் வைத்து சாதனா மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது போல இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அன்னபூரணி சாதனா
ஆக்ரோஷ சத்தத்தோடு இவர் ஆசிர்வாதம் வழங்குவது போலவும், பலர் இவரிடம் ஆசிர்வாதம் கேட்க வரிசையில் நிற்பது போலவும் இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. அம்மன் படத்தில் வருவது போன்ற கெட்டப்புடன், கொஞ்சம் திகில் ஊட்டும் வகையில் நிறைய சிரிப்பு மூட்டும் வகையிலும் இவரின் வீடியோக்கள் அமைந்து இருக்கின்றன.

சந்திரமுகி
இதை நெட்டிசன்கள் பலர் இணையத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள். அன்னப்பூரணி போல நின்றார்.. அன்னபூரணி போல தன்னை நினைச்சுக்கிட்டார்.. அன்னப்பூரணி போலவே கடைசியில் மாறிவிட்டார் என்று சந்திரமுகி படத்தில் வரும் வசனம் போல TikTok திருச்சி சாதனாவை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இவர் என்ன இன்னொரு சாமியாரா.. என்ன அடாவடி இது என்றும் சிலர் சீரியஸாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

சாதனா விளக்கம்
இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு சாதனா அளித்த விளக்கத்தில், யு டியூபில் அன்னபூரணிதான் டிரெண்டிங். ஒரே நாளில் அவர் பேமஸ் ஆனார். மக்கள் பலர் அவரை நம்புகிறார்கள். மக்கள் சிலர் அவரை நம்பவில்லை. அவர் ஒரே நாளில் ஒபாமா ஆனவர். அவர் டிரெண்டிங்கில் இருக்கிறார்.

அன்னபூரணி சர்ச்சை
எனக்கு கண்டெட் கிடைக்கவில்லை. நான் வெறுமனே அன்னபூரணி போல நடிக்க வேண்டும் என்று நடித்து வீடியோ போட்டேன். நான் சாமியார் இல்லை. எனக்கு ஆன்மீக நாட்டம் எல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த வீடியோ யூ டியூப் வருமானத்திற்காக போட்டேன் என்று TikTok திருச்சி சாதனா கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications