திருச்சி கிழக்கு தொகுதி.. சிறுபான்மை மக்கள் வாக்குகள் மட்டும் 90 ஆயிரம்.. விஜய் எடுத்த முடிவு சரியா?
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கும் சூழலில், விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்க முடிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, 2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு பயணித்து வருகிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக களத்தில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், தவெக இன்னும் பிரச்சாரத்தை கூட தொடங்கவில்லை. இதனால் விஜய்யின் ஆதரவாளர்கள் சோகத்தில் உள்ளனர்.

தவெக வேட்பாளர் பட்டியல்
இதனிடையே தவெக தரப்பில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் தயாராகி வருகிறது. அதன்படி தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளி வந்தது. திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை திமுகவின் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏவாக உள்ளார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி
இருப்பினும் சமீப காலங்களில் இனிகோ இருதயராஜ் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருடன் சில மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுகவிடம் இந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று மதிமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன. ஏனென்றால் இந்த தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது.
சிறுபான்மை வாக்குகள்
கிறிஸ்தவர்களின் வாக்குகள் சுமார் 60 ஆயிரம் இருக்கிறது. மொத்தமாக 23 வார்டுகள் இருப்பதால், இளைஞர்களும் அதிகளவில் இருக்கின்றனர். SIR பணிகளுக்கு முன்பாக 2.5 லட்சமாக இருந்த தொகுதியின் வாக்குகள், SIR பணிகளுக்கு பின் சுமார் 2 லட்சமாக குறைந்துள்ளது. ஏற்கனவே திருச்சிக்கு விஜய் சென்ற போது, தவெக தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர்.
விஜய் வெல்ல முடியுமா?
இதனால் விஜய் இந்த தொகுதியில் போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர். ஏற்கனவே விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கு உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளரை களமிறக்க உள்ளதாக தெரிய வந்தது. இப்படியான சூழலில் கே.என்.நேரு கோட்டையில் விஜய் களமிறங்க முடிவு செய்திருப்பது விவாதமாகி இருக்கிறது.
-
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!












Click it and Unblock the Notifications