"வெயிட் பண்றோம்".. சிறையிலிருந்து நேராக ஹோட்டலுக்கு போன ராஜேந்திர பாலாஜி.. உள்ளே வந்த விஐபி.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி சிறையில் இருந்த விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டல் ஒன்றில் சில மணி நேரம் தங்கி இருந்தார்.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். முன் ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவாகி இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த வாரம் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி சிறையில் இருந்து விடுக்கப்பட்ட நிலையில் அவரை திருச்சி சிறையில் வரவேற்க அதிமுகவினர் பலர் காத்து இருந்தனர். அதிகாலையில் விடுவிக்கப்பட்ட நிலையில் ராஜேந்திர பாலாஜி நேராக வீட்டிற்கு செல்லவில்லை. அவர் சிறைக்கு செல்லும் போது ஒரு டி ஷர்ட் மட்டுமே அணிந்து இருந்தார். அதன்பின் வீட்டில் இருந்து சில துணிகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. மற்றபடி உடைகள் அவரிடம் இல்லை. சிறையில் இருந்து இவர் வீட்டிற்கு செல்வதை விரும்பவில்லை.

 ராஜேந்திர பாலாஜி விடுதலை

ராஜேந்திர பாலாஜி விடுதலை

நேரடியாக வீட்டிற்கு சென்றால் நன்றாக இருக்காது.. பக்கத்துல ஹோட்டலுக்கு போங்க.. குளிச்சிட்டு போகலாம் என்று ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர்களிடம் கூறி இருக்கிறாராம். நேரடியாக வீட்டிற்கு செல்வதை "செண்டிமெண்ட்" ரீதியாக ராஜேந்திர பாலாஜி விரும்பவில்லையாம். இதையடுத்து திருச்சியில் பிரபல கண்ணப்பா ஹோட்டலுக்கு ராஜேந்திர பாலாஜி சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு புதிய வெள்ளை சட்டை, வேட்டி தயாராக இருந்திருக்கிறது.

 ராஜேந்திர பாலாஜி ஜாமீன்

ராஜேந்திர பாலாஜி ஜாமீன்

அதேபோல் அவரின் 1111 எண் கொண்ட தனிப்பட்ட கார் ரெடியாக இருந்துள்ளது. இதையடுத்து அங்கேயே சில மணி நேரங்கள் ராஜேந்திர பாலாஜி தங்கி இருக்கிறார். உள்ளேயே காலை உணவு சாப்பிட்டவர், குளித்துவிட்டு அங்கேயே சில விஐபி நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார். உள்ளே செல்ல அதிமுக நிர்வாகிகள் எல்லோருக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் சில விஐபி நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று ராஜேந்திர பாலாஜியை சந்தித்து பேசி உள்ளனர்.

விஐபி ராஜேந்திர பாலாஜி சந்திப்பு

விஐபி ராஜேந்திர பாலாஜி சந்திப்பு

அதன்பின் வெளியே வந்த ராஜேந்திர பாலாஜியை.. அங்கேயே காத்திருந்த நிர்வாகிகள் சிலர்.. தலைவரே எங்கே போனீங்க தலைவரே.. எவ்வளவு நேரமா வெயிட் பண்றது என்று கேட்டனர். இதை பார்த்த ராஜேந்திர பாலாஜி போங்க போங்க என்று மெதுவான குரலில் கூறிவிட்டு காரில் ஏறினார். பின்னர் கார் புறப்படும் முன் நன்றி என்று மிக மெதுவான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். தொண்டர்கள் பலர் காரை தொடர்ந்தபடியே ஓடினார்கள்.

ஹோட்டல் ராஜேந்திர பாலாஜி

ஹோட்டல் ராஜேந்திர பாலாஜி

ஹோட்டலில் இருந்து வந்த ராஜேந்திர பாலாஜி கொஞ்சம் சோகமாகவே காணப்பட்டார். சோர்வான முகத்தோடும், வருத்தமான நடையோடும் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் விருதுநகர் செல்லும் ராஜேந்திர பாலாஜி அங்கே வீட்டிலேயே தங்க இருக்கிறார். அவரின் பாஸ்போர்ட் தற்போது விருதுநகர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. விருதுநகர் போலீசார் இவரை விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+