மூனும் பச்ச மண்ணுங்க..ஆற்றில் மிதந்த ஆண் சடலம்! மகள்களுக்காக ஜெயிலுக்கு போன ரேகா! இது தான் காரணம்!
திருச்சி : திருச்சி அருகே பெண் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் இரண்டாவது கணவனை வெட்டிக்கொன்று ஆற்றில் வீசிய இளம்பெண் குறித்து 4 மாதங்களுக்குப் பிறகு துப்பு துலங்கிய நிலையில், அப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு (40) பண்ருட்டி அருகே உள்ள வேலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மனைவி ரேகா(30) செங்கல் சூலையில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.
தற்போது ரேகாவிற்கு 16, 14,10 வயது என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கணவர் பொன்னன் இறந்துவிட்ட நிலையில் ரேகா இவரது மூன்று குழந்தைகளுடன் தொடர்ந்து முசிறி பகுதியில் உள்ள பல்வேறு செங்கல் சூளைகளில் வேலை செய்து வந்துள்ளார்.

முறையற்ற உறவு
இந்நிலையில் அய்யம்பாளையம் அருகே சண்முகம் என்பவர் செங்கல் சூலையில் வேலை செய்த போது ரேகாவிற்கு பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவியாக கடந்த எட்டு வருடங்களாக செங்கல் சூலையில் வேலை செய்து கொண்டு ஒரே குடும்பமாக, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3. 9. 2022 அன்று முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது.

ஆண் சடலம்
இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து சடலம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விபரம் அறியப்படாததால் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரபுவின் தந்தை ஆறுமுகம் கடந்த நான்கு மாதங்களாக மகன் பிரபு குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை கண்டுபிடித்து தர வேண்டும், மகன் பிரபுவுடன் தொடர்பில் இருந்த ரேகா மற்றும் அவரது குழந்தைகளை விசாரிக்க வேண்டும் என முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பாலியல் தொல்லை
புகாரின் பேரில் போலீசார் ரேகாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது இரண்டாவது கணவர் பிரபு தனது இரண்டு பெண் பிள்ளைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அதனை நேரில் பார்த்து கண்டித்தும் கேட்காததால் தலையில் அரிவாளால் வெட்டி தடியால் அடித்து கொன்று தான் வசித்த கூரை கொட்டகையின் பின்புறம் இருந்த காவேரி ஆற்றில் தள்ளிவிட்டதாக ரேகா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

பெண் குழந்தைகள்
இதையடுத்து பெண் காவலர்கள் மூலம் குழந்தைகள் தனியாக விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் ரேகாவின் பெண் குழந்தைகள் கூறிய தகவலை கேட்டு பெண் போலீசாரும், அது விபரம் அறிந்த போலீசாரும் கண் கலங்கினர். பிரபு மிகவும் மூர்க்கத்தனமாகவும், தகாத முறையில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து ரேகாவை சம்பவம் நடைபெற்ற அய்யம்பாளையம் அருகே உள்ள செங்கல் சூளைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு ரேகா நடந்த விபரங்களை நடித்துக் காட்டினார்.

பெண் கைது
காவிரி ஆற்றின் முட் புதரில் சிக்கியிருந்த பிரபுவின் கைலி போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து ரேகாவை கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், உருட்டுகட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கணவன் இறந்த நிலையில் இரண்டாவதாக வந்த கணவன் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் அவரை வெட்டி கொன்று காவிரி ஆற்றில் மனைவி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications