Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறுமை வாழ்க்கைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்! ஜமேஷா முபீன் போல் பேஸ்புக் போஸ்ட்! திருச்சி இளைஞர் கைது!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ல் வைத்திருந்த 'என் மரணச் செய்தியை நீங்கள் அறிந்தால் என் மறுமை வாழ்க்கைக்காக நல்ல முறையில் பிரார்த்தனை செய்யுங்கள்' போன்ற வாசகத்தை பேஸ்புக்கில் வைத்திருந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.

கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.

கோவை சம்பவம்

கோவை சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்யூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளனர். மேலும் இவ்வழக்க்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் அலுவலகம் அமைத்து விசாரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜமேசா முபின்

ஜமேசா முபின்

சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு முன் காரை ஓட்டி இறந்த ஜமேசா முபின் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். "என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்பு நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள் என் குற்றங்களை மறந்துவிடுங்கள் என் இறுதிச்சடங்கில் பங்கேறுங்கள், எனக்காக வழிபாடு செய்யுங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இது ஐஎஸ்ஐஎஸ் படையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்" என்று தகவல்கள் வெளியான நிலையில், இது திட்டமிட்ட தாக்குதல் என போலீசார் கூறினர்.

திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் பரபரப்பு

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ல் வைத்திருந்த 'என் மரணச் செய்தியை நீங்கள் அறிந்தால் என் மறுமை வாழ்க்கைக்காக நல்ல முறையில் பிரார்த்தனை செய்யுங்கள்' என்ற வாசகத்தை பேஸ்புக்கில் வைத்திருந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். திண்டுக்கல் திருச்சி சாலையில் இனாம்குளத்தூர் வெல்கம் சிட்டி பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆன செளபர் அலி என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் 'என் மரணச் செய்தியை நீங்கள் அறிந்தால் என் மறுமை வாழ்க்கைக்காக நல்ல முறையில் பிரார்த்தனை செய்யுங்கள்' என்ற வாசகத்தை பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அவரது பதிவு கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்த ஜமேஷா முபின் வைத்திருந்த பதிவு போல் இருந்தது. ஆனால் இது பொதுவாகவே பலரும் பயன்படுத்தக்கூடியது தான். ஆனால் ஜமேசா முபின் விவகாரம் போல இது இருக்கலாம் என தகவல் பரவி நிலையில் உஷார் அடைந்த திருச்சி போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் சௌபர் அலியின் வீட்டிற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

 அதிரடி கைது

அதிரடி கைது

சோதனையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இருந்த போதும் சௌபர் அலி மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்,சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சௌபர் அலியின் செல்போனை கைப்பற்றியுள்ள சைபர் கிரைம் போலீசார் அதில் பயங்கரவாத கும்பலுடன் சௌபர் அலிக்கு தொடர்பு இருந்ததா கோவை போல ஏதேனும் சம்பவத்திற்கு திட்டமிட்டு இருந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+