ஜெபம் செய்வதாக பணம் பறித்து பெண்களுடன் உல்லாசம்... தேவாலய ஊழியர் மீது தூத்துக்குடி பெண் பகீர் புகார்
தூத்துக்குடி: ஜெபம் செய்வதாக கூறி பணம் பறித்ததுடன், நிறைய பெண்களை ஏமாற்றியதாகவும், தன்னையும் ஏமாற்றிவிட்டதாகவும் புதுக்கோட்டை தேவாலய ஊழியர் மீது தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் தூத்துக்குடியில் இருந்து வருகிறேன். பிரச்சனை என்று வரும் போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த பாதிரியார் மைக்கேல் நன்றாக பிரார்த்தனை செய்வாங்க அப்படீன்னு சொன்னாங்க.. அதனால் நாங்க அவர்கிட்டத்தான் வந்தோம்..

வரும் போது அவரைவிட அவர் தம்பி ஒருத்தர் இருக்கிறார்.. அவர் பெயர் ஜோஷ்வா, பாதிரியாரைவிட இவர் நன்றாக பிரேயர் பண்ணுவார் என்றும் சொன்னார்கள்.. அவரை நம்பி பிரேயருக்கு போனோம். அப்போது அவர் வீட்டுக்கு வந்து பிரேயர் செய்தார். வீட்டில் செய்வினை வைத்திருப்பதாக கூறித்தான் வீட்டுக்கு வந்து பிரார்த்தனை செய்தார். அப்படி பிரார்த்தனை செய்ய வந்த போது, என்னோடு ரொம்பவே நெருக்கமாக பழகினார்.
அப்படி பழக ஆரம்பிக்கும் போது, யோகா சென்டர் வைக்கப்போவதாக பணம் எல்லாம் கேட்டார். நானும் ஒரு டீச்சர் என்பதால் இருவரும் சேர்ந்து வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று சொல்லி பணம் கேட்டார். அதற்கான பணத்தை எல்லாம் நான் ரெடி செய்து கொடுத்தேன்..
காசு ரெடி பண்ணி கொடுத்த நான், ஒரு கட்டத்திற்கு மேல் காசு தேவைப்படுது என்று திரும்ப கேட்டேன்.. நான் என்று பணத்தை திரும்ப கேட்டனோ அப்போது முதல் பிரச்சனை தான் ஏற்பட்டது. பணம் கேட்டதில் இருந்தே பயங்கர பிரச்சனை, பேசுவும் இல்லை.. போனை எடுக்கவும் இல்லை..
சரி நம்ம தான் வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கோமே.. நேர்ல போய் பார்க்கலாம் என்று வீட்டுக்கு போனேன்.. வீட்டில் ஏற்கனவே மனைவி இருக்கிறார். அப்போது நான் அவரிடம் நியாயம் கேட்டேன்.. என்னை இப்படி நம்ப வச்சு ஏமாற்றிவிட்டாயே என்று கேட்டேன். அந்த பெண்ணை பற்றி கேட்டால், ஏதேச்சையாக வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தல் காரணமாக நடந்தது என்றார். அப்போது என்னிடம் அவர்.. உன்னை தான் ரொம்ப பிடிக்கும் என்றார்.. சரி, காசை ரெடி பண்ணி கொடு என்று சொன்னேன்.. தாரேன் தாரேன் என்று சொன்னவர் தரவே இல்லை.. சரி காசு தரவில்லை.. கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னால்.. மிகவும் கேவலமாக என்னை பேசிவிட்டார்.. வெளியில் போக சொல்லி கெட்ட வார்த்தையில் பேசிவிட்டார்.
எனக்கு நடந்த இந்த அநியாயம் நிறைய பெண்களுக்கு நடந்திருக்கிறது.. எத்தனை பேர் வந்து சொல்லியிருக்காங்க அப்படீன்னு தெரியவில்லை.. ஆனால் என்னோடு இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும்.இப்போது பேசும் போது கூட ரொம்பவும் துன்புறுத்தும் வகையில் பேசுகிறார்.. நீங்கள் வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள்.. நான் எதுவுமே பண்ணவில்லை.. ஆனால் அவர் அடித்துவிட்டதாகவும், காதில் ரத்தம் வருவதாகவும் கூறி கிரிமினலாக நடித்தார். என்னை வெட்டிவிடுவேன். கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.. எனக்கு ஒரு குழந்தை உள்ளது. நடப்பதை நினைத்தால் பயமாக உள்ளது. நான் போய் பேசினால் ரெக்கார்டு பண்ணுறாங்க.. அதை வைத்து என்ன பண்ண போறாங்க.. எனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது" இவ்வாறு அந்த பெண் கூறினார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications