பிரதமர் மோடி சொந்த காசுலயா தர்றாரு? திடீரென ரூட்டை மாற்றிய கார்த்தி சிதம்பரம்! அப்போ அது இல்லையா?
தூத்துக்குடி : தெலுங்கானா மாநிலத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியரை வசைபாடியது வருத்தம் அளிக்கிறது எனவும், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வரும் 7ஆம் தேதி ராகுல் காந்தி நடைபயண பிரச்சாரம் மேற் கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகியுமான கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டார்.

கார்த்தி சிதம்பரம்
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி நேரடியாக மக்களை சந்திப்பது நல்ல விஷயம். இது கட்சிக்கு வலு சேர்க்கும். நடைபயணம் செல்லும் வழியெல்லாம் கட்சியினர் ஒன்று திரண்டு வந்தாலே அது பலம். அதே வேளையில் பொதுமக்களை நேரடியாக சந்திப்பதில் கட்சியோட தொண்டருக்கும் தலைமைக்கும் மக்களின் நிலைப்பாட்டை கட்சி புரிந்து கொள்ள முடியும், எங்களுடைய நிலைப்பாட்டினை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்

நடைபயண பிரச்சாரம்
பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது என்பது எடுத்துச் சொல்வதற்கு இது ஒரு வாய்ப்புதான் நடைபயண பிரச்சாரம். காங்கிரஸ் கட்சிக்குள்ளே போட்டி இருந்தாலும் கட்சி ஒற்றுமையாக தான் இருக்கிறது. எந்த வகையிலும் கட்சி பிரிந்து இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரைக்கும் ஒற்றுமையாக தமிழ்நாட்டில் நடைபெறும் நடை பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள்.

நிர்மலா சீதாராமன்
தெலங்கானா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் கடையில் மோடி படம் ஏன் வைக்கவில்லை என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பிய விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கு பேசுவதை இன்று பார்த்து இருக்கிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி சொந்த பணத்தில் ரேஷன் அரிசி கொடுக்கிற மாதிரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். நிதி அமைச்சர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை வருத்தமளிக்கிறது என கூறினார். கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து வருவது போல் கார்த்தி சிதம்ரம் பேசி வந்த நிலையில், இன்று பாஜகவை நேரடியாக விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications