பள்ளி குழந்தைகள் முன்பு சிவாஜி பாடலுக்கு டான்ஸ் ஆடிய தவெக ஒன்றிய செயலாளர்.. வீடியோ வைரல்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் அமைந்துள்ள நர்சரி பள்ளியில் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு முன்பாக நடிகர் திலகம் சிவாஜி பாடலுக்கு நடனமாடிய தவெக ஒன்றிய செயலாளர் ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பள்ளிகளில் தவெக கட்சியினர் அத்துமீறி நடப்பது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் வைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம் என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பது பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமைச்சர் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சர்ச்சை பேச்சுகள் அவ்வப்போது பிரச்சனைகளை கிளப்பி வருகிறது.

Dance Performance by TVK Union Secretary in Front of School children Goes Viral

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே அமைந்துள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் ஆலய நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் நர்சரி பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி பிரான்சிஸ், ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடலுக்கு தவெக ஒன்றிய செயலாளர் அந்தோணி பிரான்சிஸ், நடனம் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சிறுகுறு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜ் ஆணைக்கிணங்க பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதால் பள்ளியில் குழந்தைகளை மகிழ்விக்க ஆடினேன் எனக் கூறி சமூக வலைதளத்தில் தவெக ஒன்றிய செயலாளர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+