ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதியாக வருவார்: அதற்கான தகுதி அவருக்கு உள்ளது.. அடித்து சொல்லும் துரைமுருகன்!
Recommended Video
தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாட்டின் ஜனாதிபதியாக வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளது என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் திமுகவின் பொருளாளருமான துரைமுருகன் எப்போதும் காமெடியாக பேசுவதிலும் டைமிங்கில் கலாய்ப்பதிலும் கெட்டிக்காரர். அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போதுகூட அசால்ட்டாக அந்த சூழ்நிலையை கையாண்டார்.
ஆட்சியாளர்களின் குறைகளை எடுத்து கூறும் துரைமுருகன் நல்ல திட்டங்களை சட்டசபையிலேயே பாராட்டியுள்ளார். துரைமுருகனின் ஹியூமர் சென்ஸை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே பாராட்டியுள்ளார்.

துரைமுருகன் புகழாரம்
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய துரைமுருகன், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்.

ஜனாதிபதியாக வருவார்
அவர் பேசியதாவது, ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின்.

ராகுல் பெயரை கூறியவர்
இந்த தேர்தலில் பிரதமர் மோடியா? ராகுலா? என விவாதம் வந்ததற்கு காரணம் ஸ்டாலின் தான். அவர் ராகுல்காந்தி பெயரை குறிப்பிடாவிட்டால் மோடியா? அல்லது வேறுயாரவது என வந்திருக்கும்.

தாய் மீது சத்தியம்
தி.மு.க தலைவர் ஸ்டாலினை தலைகுனிய வைக்கமாட்டோம் என தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்களின் தாய் மீது சத்தியம் செய்து களத்தில் பணியாற்ற வேண்டும். அப்போது தான் சிறப்பாக பணி செய்வீர்கள்.

குரூப் பாலிடிக்ஸை உருவாக்குகிறேன்
கட்சியில் உள்ள பூசல்களை தேர்தல் முடியும்வரை மறக்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் நானே வந்து குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன். இவ்வாறு துரைமுருகன் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினார்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications