அண்ணாத்த ஆடுறார்... ஒத்திக்கோ... சிலம்பும் சுற்றும் திமுக எம்.எல்.ஏ... 18-ஐ வியக்க வைத்த 68..!
தூத்துக்குடி: திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் சிலம்பம் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அனிதா சிலம்பம் ஆடும் காட்சிகளை தொகுத்து அதன் பின்னணியில் 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ' என்ற பாடலை இணைத்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
68 வயதுடைய அனிதா ராதாகிருஷ்ணன் தனது இளம் வயதிலேயே முறையாக சிலம்பம் கற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். காரணம் காதுகுத்து, கல்யாணம் என யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாது சென்று மொய் வைக்க தவறாதவர். இதனால் 'அண்ணாச்சி.. அண்ணாச்சி' என்று அவரை சுற்றி வரும் ஆதரவாளர்கள் வட்டம் பெரியது.

சுறுசுறுப்பு
இதனிடையே அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 68 வயது நடந்தாலும் தன்னை எப்போதும் 18-வயது இளைஞராகவே காட்டிக்கொள்வார். கட்சிப்பணிகளில் அவர்காட்டி வரும் சுறுசுறுப்பு காரணமாக அவர் மீதான உட்கட்சி புகார்களை ஓரங்கட்டி தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் ஸ்டாலின். அதேபோல் தூத்துக்குடி எம்.பி. கனிமொழிக்கும் பக்கபலமாக நின்று தொகுதி வளர்ச்சிப் பணிகளில் உதவி வருகிறார்.

கருத்து வேறுபாடு
மறைந்த வெங்கடேச பண்ணையார் நினைவுநாள் பேனர் வைக்கும் விவகாரத்தில் அவரது தம்பி சுபாஷ் பண்ணையாருக்கும் இவருக்கும் அண்மையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அனிதாவின் காரை உடைக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இதையடுத்து தனது காரை சேதப்படுத்தியதாக சுபாஷ் பண்ணையார் தரப்பு மீது புகார் கூறி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.

உடல் வலிமை
இந்த சூழலில் தனக்கு வயதானாலும் தனக்கிருக்கும் ஆற்றலும், உடல் பலமும் இன்னும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் கம்பு சுற்றி அசரடித்து இருக்கிறார் அனிதா. திருச்செந்தூர் அருகே தண்டுபத்து கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் சிலம்பம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications