எலும்பை உடைப்பேன்..வாயை விட்டு சிறைப் பறவையான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்! ஜாமீன் மனு ஒத்திவைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியும் மிரட்டல் விடுக்கும் வகியில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு கடந்த 9 நாட்களாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் நிலையில், அவரது ஜாமின் மனு மீதான விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், மார்க்கண்டேயன் மீதான வழக்கு விசாரணை தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபாதேவி மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை (ஜூலை 30ஆம் தேதிக்கு) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
அப்போது தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மேலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார் அப்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக வெற்றி கழகத்தினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது மூன்று பிரிவினில் வழக்கு பதிவு செய்து கடந்த 20 ஆம் தேதி அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
மார்க்கண்டேயன்
பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்து வந்து சுமார் 11 மணி நேரமாக மார்க்கண்டேயனிடம் 170 க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதித்துறை நடுவர் சுமதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இதைத் தொடர்ந்து கடந்த 22 ம் தேதி மார்க்கண்டேயன் தரப்பு சார்பில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணை செய்த நீதித்துறை நடுவர் சுமதி மார்க்கண்டேயன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் மார்க்கண்டேயன் தரப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், காவல்துறையினர் தமிழக முதல்வர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடும் வகையிலும் காவல்துறையினர் பதிவு செய்த இந்த வழக்கு சட்ட விதிமுறைகளுக்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டு, இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணை
இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு திமுக முன்னாள் அமைச்சர்கள் சிறையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி சுபா தேவி முன்னிலையில் வந்தது.
அரசுத் தரப்பு
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் மார்க்கண்டேயன் தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் ஜான் அலெக்சாண்டர் ஆகியோர் ஜாமின் வழங்க வேண்டும் என கூறி தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்
நாளை விசாரணை
இதைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபா தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெற்ற ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்


Click it and Unblock the Notifications
