’அண்ணன் மகிழ்ச்சியாக உள்ளார்’.. மிகப் பெரிய சாதனையாக பார்க்க வேண்டும்! அழுத்திச் சொன்ன கனிமொழி
தூத்துக்குடி: காலையில் சாப்பிடாமல் பள்ளியில் வரக்கூடிய பிள்ளைகள் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியாது எனவும், காலை உணவுத் திட்டம் என்பது உண்மையாகவே, திமுக அரசின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்க வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1,14,000 மாணவர்கள் பயன்பெற்றனர். இந்தநிலையில், 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் 30,992 அரசு பள்ளிகளில் படிக்கும் 18,50,000 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். இதனை தொடர்ந்து அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள வி.வி.டி நினைவு தொடக்கப் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். பின்னர்,மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தபடியே அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் திருஉருவப்படத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி," கலைஞர் கருணாநிதி அவர்கள் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக சட்டத்தை இயற்றி, எந்த நாளை அறிவித்தாரோ. அதேநாளில் நம்முடைய முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் விரிவாக்கி இருக்கிறார்.

முதலமைச்சர் பேசும்போது நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அந்த மகிழ்ச்சிக்கு வாய்ப்பு அளித்த மக்களை அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்த காலை உணவுத் திட்டம் என்பது உண்மையாகவே, திமுக அரசின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்க வேண்டும்.
நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில், காலை உணவுத் திட்டத்தின் வழியாக 46 ஆயிரத்து 18 மாணவ மாணவிகள் பயன் பெறுகிறார்கள். காலை உணவு என்பது பிள்ளைகளுக்கு மிக முக்கியமான, பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடிய பருவத்தில் மிக முக்கியமான ஒன்று. காலையில் சாப்பிடாமல் பள்ளியில் வரக்கூடிய பிள்ளைகள் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியாது. மாணவர்கள் மிகவும் சோர்வோடு அங்கே அமர்ந்திருப்பார்கள், அவர்களுக்கு சோர்வின் காரணமாகப் பாடத்தைக் கவனிக்காமல் ஆசிரியருக்கும் அது ஒரு சவாலாக மாறி, இருவருக்கும் இடையே போராட்டமாக மாறக்கூடிய நிகழ்வு கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்தியாவில் UNICEF கணக்கெடுப்பை எடுத்துக் கொண்டால், மிகக் குறைவாக வளர்ச்சி இருக்கக் கூடிய குழந்தைகள் உணவு கிடைக்காத காரணத்தால் 38 சதவீதம் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். மேலும், இந்திய அரசு கணக்கெடுப்பு ஆய்வுகளின்படி கூட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் உணவு பற்றாக்குறை, உணவு கிடைக்காமல் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 3,000 குழந்தைகள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தமான செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நம்முடைய பிள்ளைகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நம்முடைய முதலமைச்சர் எதிர்கால தலைமுறை ஆரோக்கியமானதாக, மகிழ்ச்சியோடு கல்வி பயிலக்கூடிய ஒரு தலைமுறையாக உருவாக வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட திட்டம். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்த முதலமைச்சருக்கு என்னுடைய நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications