கீதா ஜீவன் vs சசிகலா புஷ்பா.. வெளியே வர கால் இருக்காது, பேச நாக்கு இருக்காது என மிரட்டல்
தூத்துக்குடி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைப் பற்றி பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை, பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா கடுமையாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை இருக்கும் மேடையில் ஏற முற்பட்டால் கால்கள் இருக்காது என்றும், அண்ணாமலை பற்றி பேசும் நாக்கு இருக்காது என்றும் மிரட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை அணி செயலாளர் அசோகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக ஆட்சி
தொடர்ந்து 1,000 ஏழை எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின் மற்றும் சேலைகளை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து
சசிகலா புஷ்பா பேசுகையில், கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கான 1,000 ரூபாய் உரிமைத் தொகை, கல்வி கடன் ரத்து உள்ளிட்டவை செய்யப்படாததால் மக்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

அண்ணாமலையின் பழக்கமில்லை
சுய புராணம் பாட தகுதி உள்ளவர் தலைவர் அண்ணாமலை என்பதால், அவரை புகழ்கிறோம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எந்த நீதிமன்ற வாசலிலும் சொத்து குவிப்பு வழக்கிற்காக நிற்கவில்லை. அண்ணாமலைக்கு குற்றவாளிகளை கொண்டு சென்று நீதிமன்றத்தில் நின்று தான் பழக்கம். குற்றவாளியாய் நின்று அவருக்கு பழக்கம் இல்லை.

சனாதனமே பாஜக கொள்கை
24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை. அதேபோல் யாரையும் ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவினருக்கு இல்லை. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின் அண்ணாமலைக்கு மட்டுமே மக்கள் ஆதரவு இருக்கிறது. பாஜகவினர் சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவோம். ஏனென்றால் அது தான் எங்கள் கொள்கை.

கால் இருக்காது
தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையான விமர்சித்திருந்தார். அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் மேடையில் ஏறுவோம் என்று பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சசிகலா புஷ்பா, நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, அண்ணாமலை பற்றி பேசும் நாக்கு இருக்காது என்று ஆவேசமாக சாடினார்.

தூத்துக்குடியில் பாஜக
தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்யும் ஊழலை வெளிக் கொண்டு வருவோம். சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து சமூகத்தை பேணவில்லை. நாகரிக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். தூத்துக்குடியில் மாற்றம் வர போகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருக்கும்போது இங்கு திமுக தோற்க போகிறது. இதே தூத்துக்குடியில் பாஜக வெற்றி பெற போகிறது என்று தெரிவித்தார்.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications