தெரியாமத்தான் கேட்கிறேன்.. தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளையா.. ராஜேந்திர பாலாஜி கோபம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தங்களுக்கு சாதகமாக செயல்பட தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளை கழகமா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையம் ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றன.

Is the Election Commission is the Branch of AIADMK to support us? : Rajendra Balaji

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையமாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ஆட்சி அமைத்து விடலாம் என தினகரனும், ஸ்டாலினும் போடும் கணக்கு பொய்க் கணக்கு. முதல்வர் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு தெய்வ கணக்கு.

தோல்வி அடையப் போவது தெரிந்தே தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் பழிபோடுகின்றன. எங்களுக்கு சாதகமாக செயல்படுவதற்கு தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளைக் கழகமா? இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+