அவர் பாஜக அண்ணாமலை இல்லைங்க! ‘அவதூறு அண்ணாமலை’! புதுப்பெயர் சூட்டிய துரை வைகோ! பிரஸ் மீட்டில் கலகல
தூத்துக்குடி : மாநில அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என்று அண்ணாமலை சில புள்ளி விவரங்களோடு மக்களை குழப்புவதற்காக அவதூறு அண்ணாமலை ஆக கிளம்பியுள்ளார் என மதிமுக தலைமை நிலைய செயலாளரான துரை வைகோ கூறியுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து வரகனூர் வழியாக புளியங்குளம், லட்சுமியாபுரம், இளையரசனேந்தல் வழித்தடங்கலில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தமிழக முதல்வருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தார்.

துரை வைகோ பேட்டி
இதைத் தொடர்ந்து இன்று முதல் அவ்வழி தடங்களில் தினமும் 5 முறை நகரப் பேருந்துகள் இயக்கும் தொடக்க விழா நடைபெற்றது இதில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," 2014ஆம் ஆண்டுகளில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை பொருத்தவரை டீசலுக்கு மூன்று ரூபாய் 50 பைசா பெட்ரோலுக்கு ஒன்பது ரூபாய் 50 பைசாவாக இருத்தது. ஆனால் பாஜக ஆட்சியில் படிப்படியாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
தற்போது பெட்ரோலுக்கு 32 ரூபாய் 90 பைசா டீசலுக்கு முப்பத்தி ஒரு ரூபாய் 80 பைசா நவம்பரில் கலால் வாரியை குறைந்திருந்தது தற்போதும் குறைத்துள்ளது. ஒன்றிய அரசு கலால் வரியை பன்மடங்கு உயர்த்தியது. தற்போது அண்ணாமலை கூறுகிறார் மாநில அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என்று, பாஜக தலைவர் அண்ணாமலை சில புள்ளி விவரங்களோடு மக்களை குழப்புவதற்காக அவதூறு அண்ணாமலை ஆக கிளம்பியுள்ளார்.

அவதூறு அண்ணாமலை
தொடர்ந்து அவதூறு கிளப்பி வரும் அண்ணாமலை அவர்கள் மக்களை வஞ்சிக்கும் அளவுக்கு நீட் தேர்வு மற்றும் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் நுழைவுத் தேர்வு என்ற பெயரில் சட்டங்களை கொண்டு வந்துள்ளது குறித்து பேசாதது ஏன்?. மேலும் புதிய கல்வி கொள்கையில் தமிழகத்தை வஞ்சிக்கும் அளவிற்கு பல்வேறு அம்சங்கள் உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அண்ணாமலை அவர்கள் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று சொல்கிறார்.

மதிமுக பின்வாங்க மாட்டோம்
நாங்கள் சொல்கிறோம் மக்களைத் திரட்டி கமலாலயம் முன்பு காந்திய முறையில் அறவழிப் போராட்டம் செய்வோம் என கூறிக்கொள்கிறேன். ஈழத்தமிழர் தொடர்பான பொதுக் கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் ஏதேனும் குழப்பம் வந்துவிடக்கூடாது என காவல்துறையும் தொடர்ந்து கூறி வந்த நிலையில் வைகோ அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை ஆனால் நாங்கள் ஈழப்பிரச்சினையில் எங்கள் கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" என கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications