மின்தடை.. ஜெனரேட்டரும் பழுது.. செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட்ட செவிலியர்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டரும் பழுதானதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு செவிலியர் ஊசி போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் கருங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இங்கு தினமும் 2 முதல் 5 குழந்தைகள் வரை பிரசவம் நடைபெற்று வருகிறது.

Power Outage Generator Failure Nurse Gives Injection Under Mobile light at Government PHC

கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் தரப்பில் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தச் சூழலில், நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் இந்த சுகாதார நிலையத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டரை இயக்க முயன்றபோது அதுவும் பழுதடைந்திருந்தது தெரியவந்தது.

இதனால் வேறு வழியின்றி, அங்கிருந்த செவிலியர் ஒருவர் தனது செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஒளிரச் செய்து, அதன் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி செலுத்தியுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து சுகாதார நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஜெனரேட்டர் பழுதடைந்துள்ளதாகவும், அதற்குப் பதிலாக புதிய ஜெனரேட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை ஜெனரேட்டர் சுகாதார நிலையத்திற்கு வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், உடனடியாக புதிய ஜெனரேட்டரைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும், தினமும் பிரசவங்கள் நடைபெறும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டால் மாற்று மின்சார வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். புதிய ஜெனரேட்டரை விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+