தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்செந்தூர் கந்த சஷ்டி..சூரனை சம்ஹாரம் செய்ய கடற்கரைக்கு வந்த ஜெயந்திநாதர்..அரோகரா முழக்கம்

Google Oneindia Tamil News

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்து வரும் நிலையில், 6ஆம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரனை சம்ஹாரம் செய்ய கடற்கரைக்கு எழுந்தருளினார் ஜெயந்திநாதர். பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலிலானது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடாகும்.

ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பழனி முருகன் சிலைக்கு வியர்க்குமா? கெளபீனத் தீர்த்தம் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்! ஆச்சர்யம்! பழனி முருகன் சிலைக்கு வியர்க்குமா? கெளபீனத் தீர்த்தம் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்! ஆச்சர்யம்!

கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டி விழா


அந்த வகையில் நடப்பு ஆண்டில் கடந்த 25-ஆம் தேதி அன்று கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனால் விழா தொடங்கியதும் அங்கு ஏராளமான பக்தர்கள் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முருகப்பெருமானை வழிபட குடும்பத்துடன் பலர் கோவிலில் தங்கி வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.

5-ம் நாள் விழா

5-ம் நாள் விழா


கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை சூரசம்ஹாரம்

இன்று மாலை சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவின் 6ஆம் நாளான இன்று மாலை சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதானை நடைபெறுகிறது. மதியமும் உச்சிகாலை பூஜை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரத்திற்காக சுமாமி சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார்.

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

யானை மற்றும் சிங்க முகமாக மாறி மாறி உருவெடுக்கும் சூரபத்மனை ஜெயந்தி நாதம் சம்ஹாரம் செய்வதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு பணிக்காக 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

English summary
While the Gandashashti festival is going on in Tiruchendur Murugan Temple, the culminating event Surasamharam will be held this evening on the 6th day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X